பேண்ட் சட்டை அணிந்து காட்சி தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்
"கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்" எனப் போற்றப்படும் தலம் ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியுள்ள ஆண்டாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த ஆலயத்தில் மூலவரான ரெங்கமன்னார் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார்.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 90-வது தலமாக திகழ்கிறது.
ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே.
இங்குள்ள உற்சவரான பெருமாள், பேண்ட் சட்டை அணிந்து காட்சி தருகிறார்.
திருவில்லிபுத்தூரில் உள்ள ரெங்கமன்னார், வலது கையில் பெந்துகோல், இடது கையில் செங்கோல் இடுப்பில் உடைவாள் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார்.
இவரது காலில் செருப்பு அணிந்திருப்பது சிறப்பு. மேலும் இத்திருத்தலத்தில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச் சன்னிதியில் அருளுகின்றாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |