கடவுளுக்கு பிடித்த பக்தனை மனிதர்களுக்கு பிடிப்பது இல்லை.. காரணம் தெரியுமா?

By Sakthi Raj Mar 10, 2026 11:54 AM GMT
Report

இந்த உலகம் ஒரு விசித்திரமானது. இங்கு கடவுள் கொண்டாடுகின்ற பக்தனை மனிதர்களுக்கு பிடிக்கவில்லை. இதை நாம் காலம் காலமாகவே பார்த்து வர முடியும். அதாவது அறிவியலில் சிறந்தவர்கள், ஞானத்தை பெற்றவர்கள், புரட்சியாளர்கள் தத்துவவாதிகள் இவர்களை யாரையும் மனிதர்களுக்கு முதலில் பிடிப்பதில்லை.

அவர்களை பார்த்தாலே எரிச்சல் அடைவார்கள். இது மிகவும் இயல்பான ஒன்றுதான். காரணம் அறியாமையிலிருந்து விடுபட அடம்பிடிப்பவர்களுக்கும், நல்ல பாதையை தேர்ந்தெடுத்து பயணம் செல்ல விரும்பாதவர்களுக்கும் நல்லது என்று எவர் சொன்னாலும் அது கசப்பாகத்தான் இருக்கும்.

கடவுளுக்கு பிடித்த பக்தனை மனிதர்களுக்கு பிடிப்பது இல்லை.. காரணம் தெரியுமா? | God Chosen Person Always Get Rejected By Humans

2026: யுகாதி எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

2026: யுகாதி எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

அதனால் தான் கிருஷ்ண பகவான் பகவத் கீதையில்" உன் கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்று சொல்லி இருக்கிறார். அதாவது யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் உன்னை பற்றி விமர்சனம் வைக்கட்டும் . ஆனால் நீ உன்னுடைய கடமையை செய்வதிலிருந்து தவறாதே என்று நமக்கு அவர் வலியுறுத்துகிறார்.

ஆக கடமையை செய்யக்கூடிய மனிதன் கட்டாயம் இறைவனுடைய உள்ளத்திலும் இறைவனால் பாராட்டுக்குரியவனாக மாறுகிறான். மேலும், பெரும்பாலான மனிதர்களுக்கு ஒரே வட்டத்திற்குள் இருக்கத்தான் விருப்பமாக இருக்கிறது. அந்த வட்டம் ஒரு துன்பம் நிறைந்ததாக இருந்தாலும் அந்த துன்பத்திலே அவர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று தான் எண்ணுகிறார்கள்.

இது தான் அறியாமை. எவர் ஒருவர் அந்த அறியாமையிலிருந்து விடுபட்டு அந்த வட்டத்திலிருந்து தனித்து நிற்கிறார்களோ அவர்களை இந்த உலகம் வாழ தெரியாதவன் என்றும் பலருக்கும் பிடிக்காதவனாகவும் பார்க்கிறது.

கடவுளுக்கு பிடித்த பக்தனை மனிதர்களுக்கு பிடிப்பது இல்லை.. காரணம் தெரியுமா? | God Chosen Person Always Get Rejected By Humans

இந்த ஒரு விஷயம் தெரிந்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.. என்ன தெரியுமா?

இந்த ஒரு விஷயம் தெரிந்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.. என்ன தெரியுமா?

ஆனால் அதற்கெல்லாம் நாம் வருத்தம் அடையத் தேவையில்லை. கட்டாயம் இந்த உலகம் முதலில் யாரை ஒதுக்குகிறதோ அவர்களைத்தான் ஒரு நாள் கொண்டாட காத்திருக்கிறது. இதை நாம் வரலாறுகளில் மிக கவனமாக பார்க்கலாம்.

இன்றைய சாதனையாளர்கள் வெற்றியாளர்கள் எல்லோரும் ஒருநாள் மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களே. ஆனால் கடவுள் பிள்ளைகள் எப்பொழுதும் மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டாலும் மனிதர்களால் மீண்டும் ஒரு நாள் கொண்டாடப்படுவார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US