தேவையானது கிடைக்க கடவுளிடம் எப்படி கேட்க வேண்டும்?
முதலில் கடவுள் நமக்கு எதை தருவார்? நாம் வேண்டுவதையா? அல்லது நமக்கு தேவையானதையா? ஒரு தாத்தா இறக்கும் தருவாயில் தனது சொத்துக்கள் அனைத்தையும் தன் வாரிசுகளுக்கு பிரித்து உயில் எழுதி விட்டு இறந்து விட்டார் பல வருடங்கள் கழித்து எனக்கு இது வேண்டும் எனக்கு அது வேண்டும் என தாத்தவிடம் கேட்டால் கிடைக்குமா?
அது போலவே இறைவனும் நமக்கு பிறப்பு முதல் இறப்பு வரை நாம் சுமந்து வந்த கர்ம பதிவுகளுக்கு ஏற்ப என்ன என்ன இன்ப துன்பங்கள் அனுபவிக்க வேண்டுமோ அனைத்தையும் முன் கூட்டியே திட்டமிட்டு உயிலாக நம் கருமையத்தில் பதிவு செய்து விட்டார்
அதன் பொருட்டு நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என கேட்டால் கிடைக்குமா?
உண்மை என்ன என்றால் கடவுள் நமக்கு எதையுமே தருவது இல்லை நமக்கு கொடுக்க வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே கொடுத்து விட்டான்
இதில் ஒரு ஆச்சர்யம் என்ன என்றால் இறைநிலையிடம் நாம் இன்னும் வேண்டும் என கேட்டாலும் கிடைக்கும் அதனால் தான் அதனை தனிப்பெரும் கருணை கொண்டது என வள்ளல் பெருமான் குறிப்பிடடார்
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி - வள்ளலார் புதிதாக ஏதும் கேட்கும் போது ஒரு சிக்கல் உள்ளது நமக்கு எப்படி கேட்க வேண்டும் என்ன கேட்க வேண்டும் என்பது தெரியாதது தான்
அந்த சிக்கல் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மன்றத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை கூற புரியும் மன்றத்தில் ஒரு அம்மையார் அழுது கொண்டிருந்தாராம் மகரிஷி அவரிடம் ஏன் என கேட்க அந்த கடவுளுக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லை என திட்டினாராம்
அருகில் அமர்ந்த மகரிஷி என்ன தான் ஆச்சு., தெளிவா சொல்லுங்க என்றாராம்
அம்மையார் :- என் பொண்ணுக்கு Doctor மாப்பிளை வேணும் னு கடவுள் கிடட வேண்டினேன்
மஹரிஷி :- கொடுத்தாரா
அம்மையார் :- கொடுத்தார்
மஹரிஷி :- நீங்க கேட்டத கொடுத்து இருக்கா அதுக்காக இப்படி அழுதுட்டு இருக்கீங்க
அம்மையார் :- ஆன அவன் Drug Addict ஆ இருக்கானே இப்டி ஒரு மாப்பிளைய என் பொண்ணுக்கு கொடுக்கலாமா?
மஹரிஷி :- நீங்க தப்பு பண்ணிட்டு கடவுளை திட்டினா எப்படி
அம்மையார் :- நான் என்ன தப்பு பண்ணேன்
மஹரிஷி :- நீங்க Drug Addict இல்லாத Doctor மாப்பிள்ளை வேண்டும் இல்ல கேட்டு இருக்கணும்., என்றாராம் இது போலவே நாமும் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்க வேண்டும் என தெரியாமல் ஏடாகூடமாக எதாவது கேட்டு மாட்டிக்கொள்கிறோம்
நமக்கு என்ன தேவையோ அதை கொடுத்து கர்மாவை கழித்து விட்டு வா என்று அனுப்பினால் மேற்கொண்டு இது வேண்டும் என கேட்டு அதுக்கான Side Effects யும் சேர்த்து வாங்கிக்கொள்கிறோம்
எதுவுமே வேண்டாம் கொடுத்த வரை போதும் என கூறிவிட்டு கொடுத்தத்தை அனுபவிக்கும் போது அதை தாங்கும் மன உறுதி மட்டும் தருவாயாக என்று கேட்டாலே போதுமானது
இதை தான் தெய்வப் புலவர் இப்படி குறிப்பிடுகிறார் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
கடவுளிடம் எதை கேட்டாலும் கிடைக்கும் With Conditions Apply அதற்கான பின்விளைவுகளை நாம் தான் அனுபவிக்க வேண்டும் அப்படியானால் என்ன தான் வேண்டுவது எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டுவதே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரனே !
வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்று மகான்கள் கூறியதன் காரணம் இதுவே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்துவோம்., அதையே கேட்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |