உலகெங்கும் வாழும் தமிழர்கள் சித்திரை 1 அன்றை தமிழ் புத்தாண்டாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இன்று 38வது தமிழ் ஆண்டான குரோதி ஆண்டு பிறந்துள்ளது, வருடம் முழுவதும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைக்க கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இன்றைய தினம் கேரளாவில் மலையாள மக்களால் புத்தாண்டு தினமான விஷூவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அங்குள்ள கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கைகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக ஜோடியினர், கேரளா குருவாயூர் கோயிலின் மூலவரான குருவாயூரப்பனுக்கு 20 பவுன் தங்க கிரீடத்தை வழங்கியுள்ளனர்.
கோயம்புத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் - கிரிஜா ஜோடியினரே குறித்த காணிக்கையை வழங்கியுள்ளனர்.
இதன் மதிப்பு மட்டும் 13 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது, 160.350 கிராம் எடை கொண்ட கிரீடம் தீபாராதனைக்கு பின்னர் குருவாயூரப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.