வீட்டில் நடக்க இருக்கும் கெட்ட சகுணத்தை உணர்த்தும் காகங்கள்
ஒரு வீட்டில் நன்மை தீமை நடக்க இருக்கிறது என்றால் அதற்கான அறிகுறிகளை நமக்கு இயற்கை கொடுத்து விடும்.அவற்றில் ஒன்றுதான் காகம் சகுணம்.காகம் மனிதனுடைய நெருங்கிய தொடர்பு உடையது என்று சொல்லப்படுகிறது.அதாவது வீட்டில் நடக்க இருக்கும் சில ஆபத்துகளை காகம் நமக்கு முன்கூட்டியே சொல்லும் என நம்பப்படுகிறது.
அப்படியாக காகம் நமக்கு உணர்த்தும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம். பொதுவாக காகம் நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் தன்மைக்கு ஏற்ப நன்மை, தீமை உண்டாகும்.மேலும்,காகம் இன்னொரு காகத்திற்கு உணவு பகிரும் காட்சியினை பார்ப்பது மிகவும் இனிமையான செயலைக் குறிக்கின்ற சகுனமாகுமாம்.
சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும் அல்லது சிவப்பு நிற பொருட்கள்,சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.நம் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால் காகம் அதற்கான தெளிவான அறிகுறி கொடுத்து விடும்.
காலையில் வீட்டில் காகம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி பறந்தால், அது வீட்டிற்கு விருந்தினர் வருவதற்கான அறிகுறியாகும்.நாம் வெளியே செல்லும் பொழுது காகம் கரைந்து கொண்டே வந்தால் நாம் அந்த பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.
காகம் ஒருவருடைய வாகனம், குடை, காலணி அல்லது உடலின் மீது தனது சிறகால் தீண்டினால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என நம்பப்படுகிறது.ஆக,இவ்வாறு காகம் வீட்டில் ஏதேனும் அறிகுறி காட்டினால் நாம் அதை கவனமாக கவனிப்பது நன்மை அளிக்கும் என்று சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |