வீட்டில் தெய்வ நடமாட்டம் இருப்பதின் முக்கிய அறிகுறிகள்
வீட்டில் மறக்காமல் பூஜை செய்து வழிபாடு செய்வார்கள் ஆனால் அவர்களுக்கு துன்பம் எங்கு இருந்து வரும் என்று தெரியாது.எதிர்ப்பாராத இடங்களில் இருந்து துன்பம் அவர்களை வாடி வதைத்து விடும்.அப்படி துன்பப்படும் வேலையில் தெய்வம் நம்முடன் துணை நிற்கிறதா இல்லையா என்ற சந்தேகம் பல இருக்கும் அதை பற்றி பார்ப்போம்.
மனிதன் என்று எடுத்துக்கொண்டால் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இரு வேறுபாடுகளுடன் இருப்பார்கள்.அதே போல உலகம் என்று எடுத்து கொண்டால் நேர்மறை எண்ணம் எதிர்மறை எண்ணம் என்று நிரம்பி இருக்கும்.
அதே போல் தான் வீட்டிலும் ஒரு இடத்தில் நேர்மறை எண்ணம் மட்டுமே இருக்கும் என்று சொல்லிவிடமுடியாது.இந்த நேர்மறை ஆற்றல் வீட்டில் இருந்தால் வீட்டில் எந்த வித துன்பமும் ஏற்படாது.ஆனால்எதிர்மறை ஆற்றல் இருந்தால் வீட்டில் பல கஷ்டங்கள் வரும்.
அப்படி என்றால் முதலில் நாம் நம் வீட்டில் எந்த ஆற்றல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி நேர்மறை ஆற்றல்கள் நம்முடைய வீட்டில் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்வதற்குரிய சில அறிகுறிகளை பற்றி பார்ப்போம்.
பொதுவாக எந்த ஒரு வீட்டில் துர்நாற்றம் இருக்கிறதோ அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்று அர்த்தம். இதை பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.
அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் சாம்பிராணி தூபம் போட வேண்டும், ஊதுபத்தி காட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.
இதேபோல் நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கிறது என்றால் அதற்கும் சில வாசனை வரும். விபூதியின் வாசனை வரும் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கும். மேலும் எலுமிச்சம் பழத்தின் வாசனை, வேப்பிலையின் வாசனை, அதோடு வாசனை மிகுந்த மலர்களின் வாசனை.
இந்த வாசனைகளில் ஏதாவது ஒரு வாசனை நம்முடைய வீட்டில் இருந்தால் தெய்வ நடமாட்டம் அங்கு இருக்கிறது என்று அர்த்தம். இவை எதையும் உணர முடியவில்லை என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய அம்மன ஆலயத்திற்கு சென்று ஒரு எலுமிச்சம் பழத்தை அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கி வர வேண்டும்.
இந்த எலுமிச்சம் பழத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். எலுமிச்சம்பழம் காய்ந்து விட்டால் வீட்டில் தெய்வ நடமாட்டம் இருக்கிறது என்று அர்த்தம். அழுகி விட்டால் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக உணர்ந்து கொள்ளலாம்.
மேலும் நேர்மறை எண்ணங்கள் இருக்கும் வீட்டில் அவர்களுடைய மன நிலை நல்ல விதமாக இருக்கும்.அதாவது பிறருக்கு உதவி செய்தல் கருணை எண்ணம் போன்ற செயல்கள் தோன்றும்.இதுவே எதிர்மறை ஆற்றல் இருந்தால் பிறருடன் வஞ்ச எண்ணம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |