நாம் இறந்த பிறகும் நம்முடன் வருவது இதுமட்டுமே..

By Sakthi Raj Nov 03, 2026 06:10 AM GMT
Report

உலகம் வெகு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் மனிதர்களுக்கு தெரியும் ஒரு நாள் நாம் இறந்து விடுவோம் என்று. ஆனால், அதை எல்லாம் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இருக்கும் வரை நானே ராஜாவாக இருக்க வேண்டும்.

பிறகு என்ன நடக்கிறது என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை என்பதை போல் அவர்கள் பல நேரங்களில் வாழ்வது உண்டு. இதைத்தான் நாம் "ஆணவம், அகங்காரம்" என்கின்றோம்.

அதாவது மனிதர்களுடன் எல்லா பிறவியிலும் எது துணை நிற்கும்? என்பதை அவர்கள் கவனிக்க மறுக்கிறார்கள். இதுவே அந்த ஆணவமும் அகங்காரமும் வளர்வதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

நாம் இறந்த பிறகும் நம்முடன் வருவது இதுமட்டுமே.. | Good Karma Follows You Forever

நீங்கள் கடக ராசியா? திருமணத்தில் உங்களுக்கு பொருத்தம் இல்லாத நட்சத்திரம் யார் தெரியுமா ?

நீங்கள் கடக ராசியா? திருமணத்தில் உங்களுக்கு பொருத்தம் இல்லாத நட்சத்திரம் யார் தெரியுமா ?

ஆக, ஒவ்வொரு மனிதனுடைய மனதிலும் தினமும் இந்த ஒரு விஷயம் நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கையில் கவலை என்பது இருக்காது.

பிற மனிதருக்கு துன்பம் என்பதை நாம் மனதளவிலும் எண்ண தோன்றாது? கடமையை செய்ய தவற மாட்டோம். செய்த செயலுக்கான பலனையும் எதிர்பார்க்க மாட்டோம். அப்படியாக, எல்லா பிறவிகளும் நமக்கு துணை நிற்கக் கூடிய ஒரே ஒரு விஷயம் நாம் செய்த "புண்ணியம்" மட்டுமே.

நீங்களே யோசித்துப் பாருங்கள். நாம் சேர்த்து வைக்கின்ற செல்வம் ஒருநாள் வேறு ஒருவருக்கு சொந்தம் ஆகிறது.

இந்த அழகான உடலும் இறுதியில் நெருப்புக்கே சொந்தமாகிறது. நம்மை கரைக்கக் கூடிய அஸ்தியும் கங்கை நீருக்கே சொந்தமாகிறது. ஏன் நம் மகன் நமக்கு செய்யக்கூடிய அந்த திதியும் காக்கைகளுக்கு சொந்தமாகிறது.

நாம் இறந்த பிறகும் நம்முடன் வருவது இதுமட்டுமே.. | Good Karma Follows You Forever

ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளவர்கள் எளிதில் ஏமாந்து விடுவார்களாம்

ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளவர்கள் எளிதில் ஏமாந்து விடுவார்களாம்

ஆக, நம்முடைய உடல் முதல் பயன்படுத்திய பொருட்கள் வரை யாரோ ஒருவருக்கு இறுதியில் சொந்தமாகிறது. ஆனால், நாம் செய்த "தானம், தர்மம், புண்ணியம்" இவை மட்டுமே நமக்கு சொந்தமாகிறது.

இதை மட்டுமே எல்லா பிறவியிலும் நமக்கு உடன் வருகிறது. நாம் ஒவ்வொரு நாளும் இறைவன் எனும் மாபெரும் சக்தி நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டு வாழ தவற வேண்டாம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US