கோபுர கலசத்தில் ஒளிந்திருக்கும் விஞ்ஞான அறிவியல்
கோவில்களில் மிக உயரமான கோபுரங்களுடன் அதன் மேலே இருக்கும் கலசத்தை அனைவருமே பார்த்திருப்போம்.
முன்னொரு காலத்தில் ஊரில் கோவில் கோபுரத்தை விட எந்த கட்டிடமும் உயரமாக இருக்கக்கூடாது என்றொரு சட்டம் இருந்தது.
இதன் பின்னால் எவ்வளவு பெரிய ஆன்மீக உண்மை ஒளிந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
கலசங்கள்
கோபுரத்தின் உச்சியில் தங்கள், வெள்ளி செம்பு அல்லது ஐம்பொன்னால் ஆன கலசங்கள் இருக்கும்.
இதில் நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்காச்சோளம், சலமை மற்றும் எள் போன்ற தானியங்கள் கொட்டப்பட்டிருக்கும்.
குறிப்பாக வரகு அதிகளவில் இருக்கும், இதற்கு காரணம் மின்காந்த சக்தியை ஈர்க்கும் ஆற்றல் இதற்கு அதிகம்.
அதாவது 12 ஆண்டுகளுக்கு மின்காந்த சக்தியை ஈர்க்கும் சக்தி தானியங்களுக்கும், உலோகங்களுக்கும் உண்டாம்.
12 ஆண்டுகள் கழித்து பழைய தானியங்கள் கொட்டப்பட்டு, புதிய தானியங்கள் நிரப்பப்படும், இன்றைக்கு வெறும் சம்பிரதாயமாக இதை செய்து வந்தாலும் இதன் பின்னால் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மை நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது.