கடல் நடுவில் இருக்கும் சக்தி வாய்ந்த சிவன் கோயில்

By Sakthi Raj Oct 01, 2024 08:27 AM GMT
Report

பொதுவாக கோயில்கள் காலை முதல் மாலை வரை திறந்து இருப்பதை தான் கேள்வி பட்டு இருப்போம்.ஆனால் குஜராத் மாநிலத்திலுள்ள சிவன் கோயில் ஒன்று தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய கோயிலாக திகழ்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

குஜராத் மாநிலம் கோலியாக், என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த நிஸ்களங்கேஸ்வரர் எனும் சிவன் கோயில். இந்தக் கோயில் கடலுக்குள் கட்டப்பட்டு இருப்பது அதிசயம்.இக்கோயில் பாதி நேரம் கடலில் மூழ்கியபடியே காட்சி அளிக்கிறது.

அதாவது கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே உள்ளது நிஸ்களங்கேஸ்வரர் எனும் சிவன் கோயில். இரவு 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த கோயில் கடலுக்குள் மறைந்திருக்கும்.

கடல் நடுவில் இருக்கும் சக்தி வாய்ந்த சிவன் கோயில் | Gujarat Nishkalangeshwar Sivan Temple

பின்னர், கடல் உள்வாங்கி கோயிலுக்குச் செல்ல பாதை உருவாகும்.அப்பொழுது தான் நாம் இந்த சிவனை வழிபாடு செய்யமுடியும்.அதனால் கோயிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிக்குள் கோயிலுக்கு சென்று திரும்புகிறார்கள்.

இந்நேரத்திற்குப் பிறகு கோயிலை கடல்நீர் சூழ்ந்துகொள்கிறது. இந்தக் கோயிலை மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் கட்டியதாகவும் பிறகு போரில், தங்கள் சகோதரர்களான கௌரவர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க பாண்டவர்கள் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

கடலுக்குள் ஐந்து சிவலிங்கங்களை அமைத்து அவற்றைச் சுற்றி கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கடல் சீற்றங்கள் மூலம் கோயில் படிப்படியாக சேதம் அடைந்து வருவதாகவும் கொடிமரம் மட்டும் அப்படியே புதிதாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

நவராத்திரி விழாவை பற்றிய சுவாரசிய தகவல்கள்

நவராத்திரி விழாவை பற்றிய சுவாரசிய தகவல்கள்


கடலுக்குள் 1 கி.மீ தொலைவுக்கு அப்பால் இருக்கும் கோயிலுக்கு செல்வது என்பது சாதாரணமான விசயம் இல்லை என்றாலும் இதை கண்டு மக்கள் பயம் கொள்வதில்லை.

இவ்வளவு அபாயம் இருந்தும் இன்றுவரை அங்கு சென்று வழிபடும் பக்தர்களுக்கு அந்த ஈசன் அருளால் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US