கோடி நன்மையை கொடுக்க போகும் குரு: எந்த ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகிறது
நவகிரகங்களில் மங்கள நாயகனாக இருக்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒரு முறை அவருடைய ராசியை மாற்றுகிறார். தற்பொழுது குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். அப்படியாக வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் மே 11 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.
அதோடு திருக்கணித பஞ்சாங்கப்படி மே 14ஆம் தேதி தான் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த குருவின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் ஒருவித தாக்கத்தை கொடுக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி வாழ்க்கையில் அனைத்து சந்தோஷங்களையும் கொடுக்க உள்ளது. நீங்கள் இது வரை வாழ்க்கையிலும் தொழிலும் சந்தித்த சிக்கல் எல்லாம் விலகி செல்லும். உங்கள் திருமண வாழ்வில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் விலகி மகிழ்ச்சி உண்டாகும். மனதில் தைரியமும் நம்பிக்கையும் பிறக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி தொழில் ரீதியாக எதிர்ப்பாராத லாபத்தை தேடி கொடுக்க போகிறது. குடும்பத்தில் உங்களுக்கான மரியாதை உயரும். அஷ்டம சனி உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் குரு பகவான் உங்களுக்கு நல்லதே செய்யப்போகிறார்.
துலாம்:
துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கொடுக்க போகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உங்களின் உடல் ஆரோக்கியம் நல்ல முன்னேற்றத்தை பெரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |