குரு பெயர்ச்சி ஆரம்பம்-ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பக்தர்கள்
நவகிரகங்களில் மிகவும் மங்களமானவராக இருக்கக்கூடியவர் குரு பகவான். அவர் இன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் அவர்களின் ஜாதகத்திற்கு ஏற்ப நற்பலன்களை பெறுவார்கள்.
அப்படியாக, இன்றைய தினம் குரு பெயர்ச்சியை அடுத்து திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் ஆபத் சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த கோயில் குரு பகவான் வழிபாட்டிற்கு உரிய முக்கியமான தலம் ஆகும்.
அப்படியாக, ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் குரு பெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, குருபகவான் இன்று பகல் 1.19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததால் ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு குருவின் அருளை பெற மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வருகை புரிந்தார்கள். மேலும், இந்த தரிசனத்தை காண காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்து வழிபாடு செய்தார்கள்.
மேலும், மக்களின் வசதிக்கு ஏற்ப ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோயிலுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |