2025 குரு பெயர்ச்சி: எந்த ராசிகளுக்கு சாதகமாக அமைய போகிறது
ஒரு மனிதனுக்கு குருவின் பார்வை மிக மிக அவசியம்.அப்படியாக ரிஷப ராசியில் பயணம் செய்யும் குருபகவான் மே மாதம் மிதுன ராசியில் பயணம் செய்ய உள்ளார்.அதன் அடிப்படையில் 2025 குரு பெயர்ச்சி எப்படி அமையப்போகிறது.
எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்று பார்ப்போம். பொதுவாக குரு பகவான் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை அவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.அந்த வகையில் மே மாதம் 15ஆம் தேதி வியாழக்கிழமை அன்று குரு பகவான் இரவு 10:30 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார்.
குரு பெயர்ச்சி காலத்தின் போது, சில மாதங்கள் குரு பகவான் வக்கிரமாகி பின்னோக்கி செல்வார். ஆனால், 2025 குரு பெயர்ச்சியில், குரு பகவான் வக்கிரம் அடையாமல், அதிசாரம் பெற்று, ,முன்னோக்கி செல்கிறார்.
அதாவது, குரு பகவான், கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.இந்த குரு அதிசார பெயர்ச்சி 2025 - அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடக்கவுள்ளது. குரு பெயர்ச்சி நடக்கும் காலத்தில் 12 ராசிகளுக்கும் மிக பெரிய மாற்றங்களை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு மிக பெரியா அதிர்ஷ்ட்டமும் நற்பலனும் கொடுக்கிறார்.
அப்படியாக 2025 குரு பெயர்ச்சி எந்த ராசிக்கு மிக அற்புத பலன் கொடுக்க காத்திருக்கிறார் என்று பார்க்கலாம்.
ரிஷபம்:தொழிலில் வளர்ச்சி,லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்:லாப குரு என்பதால் பண கஷ்டங்கள் விலகும்.
துலாம்:பாக்கிய ஸ்தானத்தில் குரு,எதிர்பாரா அதிர்ஷ்டம் தேடி வரும்.
தனுசு:வாழ்க்கை துணையால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.நினைத்ததை சாதிப்பீர்கள்.
கும்பம்:செய்யும் காரியம் அனைத்திலும் வெற்றிகள் குவியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |