குரு பூர்ணிமா 2025: 12 ராசிகளும் வாழ்க்கையில் பெறப்போகும் அதிரடி மாற்றங்கள்
இந்து மதத்தில் பௌர்ணமி என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் விஷேசமான நாளாக பார்க்கப்படுகிறது. இன்றைய நாளில் பலரும் புனித தீர்த்தங்களில் நீராடுதல், இறைவழிபாடு செய்தல் போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்கள்.
அதாவது பௌர்ணமி நாளில் செய்யப்படும் வழிபாட்டிற்கு இரண்டு மடங்கு பலன் அதிகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படியாக, ஜூலை 10, 2025 அன்று பௌர்ணமி வருகிறது. இதை பக் மூன் என்றும் சொல்லுவார்கள்.
மேலும், சந்திரன் தற்பொழுது தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசி குருவின் வீடாகும், அப்படியாக, இந்த குரு பூர்ணிமா நிகழ்வில் 12 ராசிகளும் என்ன மாற்றங்கள் அவர்கள் வாழ்க்கையில் பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மன ரீதியாக நல்ல மாற்றங்களை சந்திக்கபோகிறார்கள். அவர்களின் கவலை, பயம் எல்லாம் விலகி வாழ்க்கையில் அடுத்த கட்ட பயணத்தை நோக்கி செல்லும் தைரியமான காலம் ஆகும்.
ரிஷபம்:
இவர்கள் இந்த காலகட்டத்தில் உறவுகளை சற்று கவனமாக கையாள வேண்டும். உங்களை பற்றி நீங்கள் புரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான காலம் ஆகும். உங்கள் திறமைகளுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
மிதுனம்:
இந்த காலகட்டத்தில் இவர்களுக்கு மனதில் தெளிவும் உற்சாகமும் தோன்றும். புதிய தொழில் தொடங்கக்கூடிய பொற்காலம். இருப்பினும் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு தனி முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
கடகம்:
இவர்களுக்கு மனதில் அமைதியும் நம்பிக்கையும் பிறக்க உள்ளது. குடும்ப நபர்களுடன் அதீத நேரத்தை செலவு செய்வீர்கள். உங்கள் மனதில் உள்ளதை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு சந்தோசம் அடைவீர்கள்.
சிம்மம்:
இந்த பௌர்ணமி தினத்தில் இவர்களுக்கு மன குழப்பங்களும் பதட்டமும் உண்டாகும். நீண்ட நாட்களாக சந்தித்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு பெறுவீர்கள். வாழ்க்கை சற்று ஏற்ற இரக்கத்துடன் காணப்படும்.
கன்னி:
இவர்கள் சற்று மன சோர்வாக காணப்படுவார்கள். இருப்பினும் முடிந்த வரை தங்களை ஊக்குவித்து முன்னேற்றம் அடைய வழி வகுப்பார்கள். இன்று முடிந்த வரை அருகில் இருக்கும் ஆலயம் சென்று வழிபாடு செய்வது சிறந்த பலன் அளிக்கும்.
துலாம்:
இன்று இவர்களின் குழப்பங்களுக்கு சரியான விடைகிடைக்காமல் போகலாம். முடிந்த வரை தியானம் செய்வது நன்மை தரும். இன்று சந்திர பகவானின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யலாம்.
விருச்சிகம்:
இன்று இவர்களுக்கு காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். மன கவலைகள் விலக பெற்றோர் மற்றும் நட்புகளுடன் மனம் விட்டு பேசுவது நன்மை செய்யும்.
தனுசு:
இவர்களுக்கு இன்று முதல் தொழில் ரீதியாக நிறைய வாய்ப்புகள் தேடி கொடுக்க உள்ளது. திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். இன்று பெருமாள் ஆலயம் சென்று வழிபாடு செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
மகரம்:
இவர்கள் முடிந்த வரை தேவை இல்லாத வாக்குவாதம் மற்றும் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் தியானம் செய்வது மட்டுமே நல்ல ஆறுதல் வழங்கும்.
கும்பம்:
இவர்கள் இன்று சந்திர பகவானை வழிபாடு செய்வது இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நிலம் வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல காலம் இது.
மீனம்:
இன்று முடிந்த வரையில் குடும்பத்தினருடன் சண்டையிடாமல் செல்வது நல்லது. அவர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். இன்று சந்திர பகவானுக்கு தண்ணீர் மற்றும் இனிப்புகள் வைத்து வழிபாடு செய்வது கஷ்டங்களை குறைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |