2025:சனி குரு கிரகத்தின் வக்ரம்-கோடீஸ்வர யோகம் பெற போகும் 3 ராசிகள் யார்?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, எல்லா கிரகங்களும் வழக்கமான வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கும்.சில நேரங்களில் வக்ரமாகவும், சில நேரங்களில் நேராகவும் நகரும். இந்த பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும்.
அப்படியாக 2025 ஆம் ஆண்டில் புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி போன்ற 4 சக்தி வாய்ந்த கோள்கள் வக்ரகதியில் சஞ்சரிப்பார்கள்.இதனால் சில ராசிகளுக்கு எதிர்பாராத பொற்காலம் தொடங்க உள்ளது.அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த 4 கிரகங்களின் வக்கிர சஞ்சாரம் பணவரவில் மிக பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறது.லாபமே பெரிய முடியாது என்று நினைத்த முதலீடுகள் உங்களுக்கு திடீர் பணவரவு கொடுத்து சந்தோஷத்தில் ஆழ்த்த போகிறது.புதிய வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
கடகம்:
நான்கு சக்திவாய்ந்த கோள்களின் வக்ரகதியால் கடக ராசிக்காரர்களுக்கு நினைத்தது எல்லாம் பொன்னாகும் காலம் இது.நீங்கள் உங்கள் புதிய முயற்சிகளை தொடங்குவதால் வெற்றி அடைவீர்கள்.உங்கள் ஆளுமை சிறப்பாக அமையும்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.விளையாட்டில் முழு ஈடுபாட்டுடன் செயல் படுவீர்கள்.
மகரம்:
கோள்களின் வக்ரகதி புத்தாண்டில் மகர ராசிக்காரர்களுக்கு மன அமைதியை கொடுக்க போகிறது.வேலை இல்லாமல் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.வேலை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.குடும்பத்தில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.புதிய வீடு தொழில் செய்யும் யோகம் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |