கிருஷ்ணர் போட்ட மூன்று புதிர்-விடைதெரியாமல் திணறிய பாண்டவர்கள்

By Sakthi Raj Jan 10, 2025 08:52 AM GMT
Report

பொதுவாக வீட்டில் குழந்தைகள் விளையாடி கொண்டு இருக்கும் பொழுது யாரேனும் எதோ ஒரு புதிர் தெரிந்து வைத்து கொண்டு அதை நணபர்களிடம் கேட்டு அனைவரையும் சிந்திக்கவைத்து கொண்டு இருப்பார்கள்.

மேலும்,இந்த புதிர் விளையாட்டு என்பது சுவாரஸ்யமானதும்,யோசித்தால் பல அர்த்தங்கள் நிறைந்த ஒரு விளையாட்டு ஆகும்.இப்படித்தான் ஒரு சமயம் பாண்டவர்களும் ஒரு புதிர் விளையாட்டில் மாட்டிக்கொண்டனர்.

அவர்களால் அந்த கேள்விக்கு பதிலே யோசிக்க முடியவில்லை.அப்படியாக அவர்கள் எந்த புதிர் கேள்விக்கு விடை தெரியாமல் திணறினார்கள்?அந்த புதிர் கேள்வி கேட்டது யார் என்று பார்ப்போம்.

கிருஷ்ணர் போட்ட மூன்று புதிர்-விடைதெரியாமல் திணறிய பாண்டவர்கள் | Krishnar Pandavargal Mahabaratham Incident

ஒரு சமயம் சகாதேவன் சந்தைக்கு சென்று கொண்டு இருந்தான்.அப்பொழுது வழியில் ஒரு அழகான குதிரை.பார்த்த உடன் அதை நாம் வாங்கிவிடவேண்டும் என்ற தோரணை.அதனால் அந்த குதிரை வியாபாரியிடம் சென்று,அந்த குதிரையின் விலை கேட்கிறார் சகாதேவன்.

ஆனால் வியாபாரியோ இந்த குதிரையை விலைக்கு தரப்போவதில்லை,இருந்தாலும் நான் ஒரு கேள்வி கேட்பேன்?அதற்கு சரியான விடை கொடுத்தால்,இந்த குதிரையை நான் இனாமாகவே தந்து விடுகின்றேன் என்றார்.

சகாதேவனும்,மிகுந்த அவளுடன் அப்படியானால் கேளுங்கள் அந்த கேள்வியை என்று மிகுந்த ஆவலுடன் சொன்னார்.சரி,நான் சொல்வதை கவனகமாக கேளுங்கள் என்று கேள்வியை ஆரம்பிக்கிறார் அந்த வியாபாரி.

வீட்டில் தீய சக்திகள் இருப்பதை உணர்த்தும் 3 உயிரினங்களின் வருகை-கவனமாக இருங்கள்

வீட்டில் தீய சக்திகள் இருப்பதை உணர்த்தும் 3 உயிரினங்களின் வருகை-கவனமாக இருங்கள்

அதாவது ஒரு ஊரில் ஒரு பெரிய கிணறு உள்ளது. அதை சுற்றிலும் ஏழு சிறிய கிணறுகள் இருக்கிறது.அந்த பெரிய கிணறின் நீரை எடுத்து ஏழு சிறிய கிணறுகளை நிரப்ப முடியும். ஆனால், ஏழு கிணறுகளில் இருக்கும் நீரால் பெரிய கிணற்றை நிரப்ப முடியாது. ஏன் அப்படி?என்று கேள்வியை முடித்தார் வியாபாரி.

சகதேவனுக்கு அந்த கேள்வி எளிதாக தெரிந்தாலும் அதற்கான சரியான விடையை சொல்லமுடியாமல் யோசித்தபடியே அங்கயே அமர்ந்து விட்டார்.சகாதேவனை தொடர்ந்து நகுலன் அந்த சந்தைக்கு வந்தார்.அவருக்கும் அந்த குதிரையை பார்த்து மிகவும் பிடித்துவிட்டது.வாங்க வேண்டும் என்று வியாபாரியிடம் போக,சகாதேவனுக்குச் சொன்ன அதே நிபந்தனையை நகுலனிடமும் வியாபாரி சொன்னார்.

நகுலனும்,சரி கேள்வியை கேளுங்கள் என்று பதில் சொல்ல ஆர்வமாக காத்திருக்கிறான்.வியாபாரி நகுலனிடம்,ஒரு ஊசியின் காது வழியாக ஒரு யானை நுழைந்து மறுபக்கம் செல்ல முடிந்தது. ஆனால், அதன் வால் மட்டும் மாட்டிக்கொண்டது. எதனால்?” என்றார். விடையை யோசிக்கமுடியாமல் குலனும் சகாதேவனுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டார்.

கிருஷ்ணர் போட்ட மூன்று புதிர்-விடைதெரியாமல் திணறிய பாண்டவர்கள் | Krishnar Pandavargal Mahabaratham Incident

அடுத்தது, அர்ஜுனன் அங்க வந்தார். நடந்ததை கேட்ட அர்ஜுனன் சரி நாம் எப்படியாவது விடையை சொல்லி குதிரையை வாங்கிவிடலாம் என்று கேட்க,வியாபாரியும் சரி என்று ஒரு புதிரை விடுத்தான்.அதாவது,ஒரு வேலி போடப்பட்ட வயலில் விளைச்சல் நன்றாக இருந்தது.ஆனால்,அறுவடை செய்யும் நேரத்தில் விளைந்த தானியங்கள் எதுவுமே காணப்படவில்லை.வேலியும் அப்படியே இருந்தது. யார் எடுத்திருப்பார்கள்?” என்று கேட்டான்.

விடை தெரியாமல் அர்ஜுனனும் நகுலன் மற்றும் சகாதேவனுடன் அமர்ந்து கொண்டார்.இப்படி இந்த மூவர்களும் விடை தெரியாமல் அமர்ந்து விட்ட செய்தி அறியாமல் மூன்று தம்பிகளையும் வெகு நேரம் காணவில்லை என்று பீமனை அழைத்து அவர்களைத் தேடி கண்டு வரும்படி கூறி அனுப்பினார் தருமர்.

நினைத்ததை நடக்கச்செய்யும் வைகுண்ட ஏகாதசி- ஏழுமலையான் கோயில்களில் சொர்கவாசல் திறப்பு

நினைத்ததை நடக்கச்செய்யும் வைகுண்ட ஏகாதசி- ஏழுமலையான் கோயில்களில் சொர்கவாசல் திறப்பு

 

பல இடத்தில் தேடியும் கிடைக்காத மூவர்களை இறுதியாக சந்தையில் அமர்ந்து இருந்ததைப் பார்த்து, விபரங்களை அறிந்து கொண்டார் பீமன்.முதலில் மூவரும் கிளம்புங்கள் இந்த குதிரையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்.

அண்ணன் உங்களைக் காணாமல் மிகுந்த கவலையோடு இருக்கிறார்.எல்லோரும் என்னுடன் கிளம்புங்கள்” என்று கூட்டிக்கொண்டு போனார்.பிறகு தம்பிமார்களை சந்தித்த தருமர்.அவர்கள் சந்தைக்கு போன விபரத்தையும், வியாபாரி விடுத்த புதிர்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு தருமர் அவரின் தம்பியிடம் நீங்கள் நினைப்பது போல் அங்கு இருந்தவர் குதிரை வியாபாரி அல்ல.ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவேதான்.நீங்கள் புதிர்களுக்கு உண்டான விடைகளை சூசகமாக எல்லோரும் அறிந்து கொள்வதற்காகத்தான் உங்களிடம் கேட்டிருக்கிறார் என்று அவர் கேட்ட புதிர் வினாக்களுக்கு பதில் சொன்னார் தருமர்.

கிருஷ்ணர் போட்ட மூன்று புதிர்-விடைதெரியாமல் திணறிய பாண்டவர்கள் | Krishnar Pandavargal Mahabaratham Incident

முதலில் கூறிய பெரிய கிணறு என்பது பெற்றோர்.சிறிய கிணறுகள் குழந்தைகள். பெற்றோர் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அவர்களை பேணிக்காப்பார்கள்.ஆனால், குழந்தைகள் பெற்றோரை கவனிக்கத் தவறி விடுவார்கள் என்பதுதான் அதன் விடை.

இரண்டாவதாகக் கூறிய ஊசியின் காது வழியே யானை போனது. வால் போக முடியவில்லை என்பது கெட்ட விஷயங்கள் சீக்கிரமாக மனிதரிடையே ஊடுருவி பரவி விடும். நல்ல விஷயம் என்பது எளிதில் ஒருவரையும் சென்று அடையாது என்பதுதான்.

மூன்றாவதாகக் கூறிய விளைந்த நிலம் என்பது மக்கள். வேலி என்பது அதிகாரி. அதிகாரிகள் மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களை பாதுகாக்காமல் அவர்களே மக்களிடம் சுரண்டி அவர்களுக்கு ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார்கள் என்பதுதான். புதிர்களின் பொருள் புரிந்ததா தம்பிகளா?” என்றார் தருமர்.

ஆக கண்ணன் ஒரு விளையாட்டு பிள்ளை என்பதை நாம் அறிவோம்.அவர் ஒருவருக்கு ஒரு விஷயத்தை புரியவைக்கவேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியாவது அதை செய்து செய்து விடுவார். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US