வீட்டில் தீய சக்திகள் இருப்பதை உணர்த்தும் 3 உயிரினங்களின் வருகை-கவனமாக இருங்கள்
வீட்டில் எதிர்மறை சக்திகள் சூழ்ந்து இருக்கிறது என்றால் அதற்கான அறிகுறிகளை கட்டாயமாக காண்பித்து விடும்.அதாவது தேவை இல்லாமல் குடும்பத்தில் சண்டை,நல்ல காரியங்கள் செல்லும் பொழுது தடங்கல் உடல்நல குறைவு என்று ஏதேனும் அறிகுறியை நமக்கு உணர்த்தி கொண்டே இருக்கும்.
வீடு எவ்வளவு தான் வெளிச்சமாக இருந்தாலும் எதோ இருட்டு நம்மை சூழ்ந்து இருப்பது போல் உணருவோம்.மேலும் எதையும் சரியாக சிந்தித்து செயல்படமுடியாது,புத்திகூர்மை மங்கும்.அவ்வாறு உணர்ந்தால் நம் வீட்டில்எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து இருக்கிறது என்று அர்த்தம்.
அதாவது வீட்டில் இருக்கும் பொழுது அவர்கள் எப்பொழுதும் ஏதேனும் குழப்பத்தில் இருப்பார்கள்.அதுவே வெளியில் சென்று விட்டால் மனம் தெளிவடைவதை பார்க்க முடியும்.இதற்கு காரணம் வீட்டில் நடமாடும் கெட்ட நேரம் தான்.
அதே போல் சம்பந்தமே இல்லாமல் வீட்டிற்கு சில உயிரினங்கள் வருவதை வைத்தும் அந்த வீட்டில் பில்லி, சூன்யம், ஏவல் பிரச்னைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். ஒரு சில விஷ பூச்சிகள் வீட்டிற்குள் வந்தால் நமக்கு கெட்ட காலம் ஆரம்பமாகி விட்டது என்கிறார்கள்.
அப்படியாக பாம்பு என்றால் எல்லோருக்கும் அச்சம் உருவாகும்.பாம்புகள் வீட்டைச் சுற்றி இருக்குமே தவிர, வீட்டிற்குள் வருவது அரிது.அப்படி பாம்பு ஒரு வீட்டிற்குள் வருகின்றது என்றால் அவர்கள் குடும்பத்தில் ஏதோ ஒரு வகையில் மனக்கசப்பு ஏற்படயிருப்பதை சுட்டிக் காட்டுகிறது.
அதே போல் கருவண்டு ஒரு வீட்டிற்குள் நுழைகிறது என்றாலும் அவை நல்ல சகுனமில்லை.மேலும் கருவண்டை பயன்படுத்தி ஒருவருக்கு செய்வினை செய்ய முடியும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆதலால் கருவண்டு வீட்டிற்கு வந்து வட்டமிட்டு கொண்டு இருந்தால் சற்று கவனமாக இருக்கவேண்டும் அதே போல் தேரை வந்தாலும் நாம் கவனமாக இருக்கவேண்டும்.அவை நம் வீட்டில் நடக்கவிருக்கும் குழப்பத்தை முன் எச்சரிக்கை செய்கிறது.
ஆக இவ்வாறான உயிரனங்கள் வீட்டிற்குள் வந்தால் அச்சம் அடையாமல் அவை வந்து சென்ற இடத்தை சுத்தம் செய்து வீட்டையும் நன்றாக சுத்தம் செய்து விளக்கு ஏற்றி சாம்பிராணி தூபம் போட ஆரம்பித்தால் எல்லா துன்பம் விலகி விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |