சனிபகவான் முடிவு எடுத்துவிட்டார்-எந்த ராசிக்கு நல்ல காலம் தொடங்கியது தெரியுமா?
நவகிரகங்களில் சனிபகவான் நிதி தவறாமல் நடக்கூடியவர்.மனிதனின் கர்மவினைகளுக்கு ஏற்ப அருள் வழங்குபவர்.ஆதலால் சனிபகவான் என்றால் பலருக்கும் ஒருவித அச்சம் உருவாகும்.அப்படியாக சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியின் கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார்.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டு சனிபகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.இதனால் சில ராசிகளுக்கு நன்மை உண்டாக போகிறது.அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மகரம்:
மகர ராசியில் இரண்டாவது சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.இதனால் முதலில் உங்கள் வாழ்க்கையில் உண்டான தடைகள் யாவும் படிப்படியாக விலகும்.பிறரிடம் எப்படி பழகவேண்டும் என்று சாதுரியமாக செய்லபட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அமையும்.வெளிநாடு யோகம் எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் ஆறாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.இதனால் தேவை இல்லாத செலவுகள்,கடன் சுமை முற்றிலுமாக குறையும்.தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும்.குடும்பத்தினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.அலுவலகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.இதனால் இத்தனை நாட்கள் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் காணாமல் போக போகிறது.அவமானம் மட்டுமே சந்தித்த உங்களுக்கு இனி வெற்றிகள் குவிய போகிறது.சொத்து சேர்க்கை மனமகிழ்ச்சி கொடுக்கும்.உங்கள் துன்ப சிறையில் இருந்து முற்றிலுமாக விடுதலை கிடைக்கும்.இந்த காலத்தை சரியாக பயன்படுத்தினால் சாதனையாளர் ஆகலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |