குரு வக்கிர பெயர்ச்சி 2025:அதிர்ஷ்ட காற்று எந்த ராசிகளுக்கு?
நவகர்கங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடம் ஒருமுறை தனது இடத்தை மாற்றிக்கொள்வார்.அந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் பல விதமான தாக்கத்தையும் மாற்றத்தையும் உண்டாக்கும்.அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றி உள்ளார்.
அதே போல் வ்ருகின்ற 2025ஆம் ஆண்டு குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். இப்பொழுது குருபகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்திருக்கின்றார். இந்நிலையில் குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று தனது வக்கிர பயணத்தை தொடங்கினார்.
12 ஆண்டுகள் கழித்து ரிஷப ராசியில் குரு பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். 119 நாட்கள் வக்கிர நிலையில் குரு பகவான் பயணம் செய்வார்.இந்த வக்கிர பயணம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு விபரீத ராஜயோகம் உருவாகும்.அவை என்ன ராசிகள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார்.இதனால் உங்கள் நிதி நிலையில் சிறந்த மாற்றம் உண்டாகும்.அலுவலகத்தில் உங்களுக்கு திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும்.மேற்படிப்பு படிக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் உதவியால் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார்.இதனால் நீங்கள் இத்தனை நாள் வியாபாரத்தில் சந்தித்த பிரச்னைகள் எல்லாம் படிப்பையாக குறையும்.எட்டி பார்க்காத யோகம் உங்கள் வீட்டிலே தங்கப்போகிறது.நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமண வரன் கைகூடி வரும்.
கடகம்:
கடக ராசியில் குருபகவான் 11 வது வீட்டில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த வித பாதிப்பும் உண்டாகாது.புதிய வீடு கட்டும் வாய்ப்புகள் உருவாகும்.குடும்பத்தினர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.சுபகாரியம் நற்செய்திகள் உங்கள் வீடு தேடி வரும்.வங்கியில் வாங்கிய கடனை அடைப்பீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |