ஸ்ரீ குருபகவான் திருக்கோயில்- குருப்பெயர்ச்சி விழா (நேரலை வீடியோ)
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு உலகப் பிரசித்தி பெற்ற ஆலங்குடி குருபகவான் கோயிலில் சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு குரு பகவான் அருட்பார்வை கிடைக்க ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் உள்ளது ஆபத்சகாயேஸ்வரர் கோயில். நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரதலமாக இக்கோயில் திகழ்கிறது.
மேலும் இக்கோயிலில் குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது சிறப்பு வழிபாடு நடைபெறும்
அதன்படி இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதுமிருந்து திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர்.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உத்தரவின்பேரில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று மாலை குருபகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்கிறார்.
இந்த குருப்பெயர்ச்சிக்கு ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுஷ், கும்பம், மீனம் உள்ளிட்ட ராசிகள் பரிகார ராசிகளாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு இந்த ராசிக்காரர்கள் மற்றும் பக்தர்கள் ஆலங்குடி குருபகவான் கோயில் வழிபாட்டில் பங்கேற்கஅதிக அளவில் வந்துள்ளனர்.பக்தர்கள வசதிக்காக நிழற்பந்தல், குடிநீர்,சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |