அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய அனுமனின் பக்தி
ஸ்ரீ ராமரும் சீதா தாண்டி ஸ்ரீ ராமரும் அனுமன் என்று தான் சொல்லவேண்டும்.அவ்வளவு அன்பும் பக்தியும் கொண்டு அனுமன் ஸ்ரீ ராமரை பார்த்து கொண்டார்.அப்படியாக ஸ்ரீ ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி வந்த பொழுது அனுமன் காலை முதல் இரவு வரை ஸ்ரீ ராமருடனே இருந்து அனுமன் மிகவும் பய பக்தியாக பார்த்து கொண்டார்.
இதை கவனித்த சீதா தேவி,லக்ஷ்மணன், பரதன் என்று உடன் இருந்த அனைவரும் அனுமனின் சேவையை எண்ணி வியந்தனர். ஸ்ரீ ராமரும் அனுமன் அவருக்கு செய்த செய்ததை பாராட்டினார்.அதை பார்த்து கொண்டு இருந்த சீதா தேவி மற்றும் ராமரின் சகோதரர்களுக்கு ஸ்ரீ ராமரை தாங்களும் அனுமன் போல் உடன் இருந்து ஒரு நாளாவது நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உருவானது.
அதை ஸ்ரீ ராமரிடம் அணுகி உங்களுக்கான முழு சேவையையும் அனுமன் ஒருவரே செய்கிறார் ஒரு நாள் மட்டும் ஆவது நாங்கள் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகின்றோம் என்று தங்கள் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
ஸ்ரீ ராமபிரானும் அவர்கள் கோரிக்கையை ஏற்று கொண்டார்.பிறகு எல்லோரும் ஸ்ரீ ராமருக்கு காலை முதல் இரவு வரை என்னனென்ன சேவைகள் செய்யவேண்டும் என்று ஒரு பட்டியலிட்டு ஸ்ரீ ராமரிடம் காண்பித்தார்கள். அதை பார்த்த ராமர் என்ன இதில் அனுமன் பெயர் இடம்பெறவில்லையே என்று கேட்க அதற்கு அவர்கள் எல்லா சேவைகளையும் நாங்களே செய்கின்றோம் என்று பதில் சொன்னார்கள்.
உடனே ராமர் சிரித்தவாறே சரி ஏதேனும் வேலை விட்டுவிட்டால் அதை அனுமன் செய்யலாம் அல்லவா என்று கேட்க,அதற்கு சீதா தேவி அப்படி ஒரு நிலைவராது என்று சொன்னார்கள். பிறகு ஸ்ரீ ராமர் நடந்ததை எல்லாம் அனுமனிடம் சொல்லி அவரை ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி கேட்டு கொண்டார்.
மறுநாள் விடிந்தது காலை செய்ய வேண்டிய சேவைகள் அனைத்தையும் சீதா தேவியும் ராமரின் தம்பிகளும் செய்தனர்.அவர்களுக்கு எல்லாம் ஒரே மகிழ்ச்சி நாம் ராமருக்கு சேவை செய்கின்றோம் என்றும் அவர்களுக்கு ராமருடன் இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஸ்ரீ ராமரின் கட்டளைப்படி அனுமன் ஸ்ரீ ராமபிரான் அறையின் வாசலிலே அமர்ந்து இருந்தனர்.இடையில் ஸ்ரீ ராமருக்கு சேவைகள் எல்லாம் நன்றாக நடக்கிறதா என்று கவனித்து கொண்டார் அனுமன்.பகல் பொழுதில் எந்த சேவையும் குறைவின்றி போனது.
பிறகு இரவு ஸ்ரீ ராமர் உறங்க அவரின் அறைக்கு வந்தார்.சீதா தேவி தாம்பூலத்துடன் வர ஸ்ரீ ராமபிரானின் திறந்த வாய் மூடவே இல்லை.பேச்சோ மூச்சோ இல்லை.அதிர்ந்து போனார் சீதாதேவி.ரதன், லக்ஷ்மணன் அனைவரையும் கூப்பிட்டார்.
அரண்மனை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் ஸ்ரீராமரை பரிசோதித்துவிட்டு எந்த நோயும் இல்லை என்று கூறிவிட்டு கிளம்பி விட்டார்.பின்பு வசிஷ்டரை அழைத்து வந்தனர். அவரும் ஏதேதோ செய்து பார்த்துவிட்டு தியானம் செய்யத் தொடங்கினார்.
பிறகு அவர் இதற்கெல்லம் அனுமன் தான் சரியான விடை அளிக்க முடியும் என்று சொன்னார்.பிறகு எல்லோரும் அனுமனை அழைக்க அனுமனும் வந்தார்,வந்து ஸ்ரீராமரின் வாய்க்கு நேராக சொடக்குப் போட்டதும் அவர் வாய் தானாகவே மூடிக்கொண்டது.
அதை பார்த்த பிறகு தான் அனைவர்க்கும் ஒரு நிம்மதி பிறந்தது.அப்போது ஸ்ரீராமர் சொன்னார், “எனக்கு கொட்டாவி வந்தால் அனுமன்தான் சொடக்கு போடுவார். இது உங்களுக்குத் தெரியவில்லை” என்றார். பக்தி சேவையில் நிகர் அனுமனே.அவரின் அந்த அன்பும் பக்தியும் பார்த்து அனைவரும் வியந்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |