ராஜஸ்தான் மாநிலம், மெஹந்திபூர் என்ற இடத்தில் பாலாஜி கோயில் உள்ளது.
இக்கோயிலில் உள்ள அனுமனை தரிசித்தால் தீய சக்திகளும், பில்லி சூன்யமும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோயிலில் அருளும் அனுமனை ‘பாலாஜி’ என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள்.
இந்தக் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூறும் குறைகளை அனுமன் கேட்கிறார் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு உள்ளது.
இந்த ஆலயத்தில் பாலாஜி மகாராஜா மற்றும் அவரின் உதவியாளர்கள் ஸ்ரீ பிரேத்தராஜ் சர்க்கார், ஸ்ரீ பைரவ தேவ் ஆகிய முக்கியமான மூன்று சிலைகள் உள்ளன.
முதலில் அனைவரும் பிரேத்தராஜ் ராஜாவை தரிசனம் செய்துவிட்டு பாலாஜியை தரிசனம் செய்துவிட்டு கடைசியாக பைரவ பாபாவை தரிசனம் செய்யவது முறை.
பாலாஜி சிலையின் மார்பிலிருந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இது அனுமனின் வியர்வை என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
இக்கோயிலில் உள்ள பாலாஜியின் சிலை சுயம்புவாக உருவானது என்றும் சொல்லப்படுகிறது.
இக்கோயிலுக்கு எண்ணற்ற பேய் பிடித்த நபர்களையும், பில்லி சூன்யத்தால் பாதிக்கப்படவர்களையும் குணப்படுத்த இங்கு கூட்டி வருகிறார்கள்.
இக்கோயிலில் யாரையும் தொட்டுப் பேசவோ அல்லது உணவு உண்ணவோ கூடாது.
மேலும், இக்கோயிலை விட்டு வெளியே வந்த பிறகு திரும்பிப் பார்க்கக் கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |