41 வருடங்களுக்கு ஒருமுறை மக்களை நேரில் சந்திக்க வரும் ஹனுமான்
ராமாயணத்தில் ராமரின் பக்தரான ஹனுமான் நாம் விரும்பும் ஒரு முக்கிய கடவுளாவார்.
கலியுகத்தில் கல்கி அவதாரத்தின்போது ஹனுமானின் உதவி கண்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
பல வருடங்களுக்கு முன்னர் ஒரு புகைப்பட கவிஞர் ஹனுமான் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவரைப் புகைப்படம் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
ஹனுமான் ஒரு குகைக்குள் இன்றும் தவம் செய்து வருகிறார், தேவைப்படும்போது மக்களுக்காக மீண்டும் வருவார்.
அந்தவகையில், ஹனுமான் இலங்கையில் உள்ள ஒரு காடுகளில் வாழ்ந்து வரும் மதங் இன மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.
இவர்கள் இந்த நவீன உலகத்தை போல் அல்லாமல், இன்றும் தங்களது பழைமையான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பின்பற்றி வருகின்றனர்.
இவர்கள் ராவணன் தம்பி விபிஷணனின் வம்சாவளிகள் என்றும் கூறப்படுகிறது.
அதனாலேயே இவர்களைப் பார்க்க ஹனுமான் 41 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறாராம்.
ராமர் சென்றப்பிறகு மிகவும் சோகத்துடன் ஹனுமான் இலங்கையில் உள்ள பித்ரு மலைக்குச் சென்று தவம் செய்ய தொடங்கியிருக்கிறார்.
அப்போது அவருக்கு சேவை செய்து உதவி செய்த வந்த இந்த மதங் இன மக்களுக்கு ஒரு வரத்தை அளித்தார்.
ஒவ்வொரு 41 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் இடத்திற்கு வந்து தர்மம் மற்றும் அறிவு ஆகியவற்றை போதிப்பதாக வரம் அளித்தார்.
கடைசியாக அவர் மே 27ஆம் திகதி 2014ஆம் ஆண்டு அவர்களை சந்தித்திருக்கிறார், மீண்டும் அவர் 2055ஆம் ஆண்டு வருவார் என்பது அந்த மக்களின் எதிர்பார்ப்பு என்று சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |