திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய செய்யவேண்டிய பரிகாரம்

By Sakthi Raj Aug 19, 2024 12:00 PM GMT
Report

வாழ்க்கையில் திருமண பந்தம் என்பது மிக முக்கியமான பந்தம்.நம்முடைய பாதி வாழ்க்கையின் ஒரு பகுதி திருமண வாழ்க்கையில் தான் செலவிட வேண்டும்.அப்படியாக அந்த திருமணத்திற்கு சரியான வரன் அமையவேண்டும் என்று தான் எல்லோருடைய கனவாக இருக்கும்.

திருமணத்தில் மணமகன் மணமகளும் நல்ல பந்தத்தோடு அன்பும் பாசமும் கொண்டு வலக்கையை நடத்த வேண்டும்.அப்படியாக திருமணம் ஆகும் வயத்தில் இருப்பவர்கள் அனைவர்க்கும் ஒரு வித பயம் ஏற்படும் அதாவது நல்ல கணவன் மனைவி அமையவேண்டும் என்று.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய செய்யவேண்டிய பரிகாரம் | Happy Marriage Life Worship

அப்படியாக ஒருவருடைய திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம். பொதுவாகவே திருமணத்தில் தடைகள் ஏற்படுகிறது அல்லது திருமணத்தில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறது என்னும் பட்சத்தில் அதற்கு முக்கியமான காரணமாக திகழக்கூடியவர்கள் ராகு கேது தான்.

இவர்களின் ஆதிக்கத்தால் தான் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் என்பது ஏற்படும். அதனால் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பவர்கள் ராகு கேதுவை வழிபாடு செய்ய வேண்டும்.

தஞ்சையில் மிரள வைக்கும் சக்தி வாய்ந்த கோயில்கள்

தஞ்சையில் மிரள வைக்கும் சக்தி வாய்ந்த கோயில்கள்


மேலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், போன்ற தோஷங்கள் இருந்தாலும் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் என்பது ஏற்படும். எப்பேர்ப்பட்ட திருமண பிரச்சினையாக இருந்தாலும் ராகு கேதுவை வழிபாடு செய்யும்பொழுது அந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று ராகு காலமான காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணிக்குள் அருகில் நாக சொரூபமாக இருக்கக்கூடிய தெய்வத்தின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

உதாரணமாக நாகாத்தம்மன், கருமாரியம்மன் போன்ற கோவில்களுக்கு செல்லலாம். அப்படி அந்த மாதிரி கோயில்கள் இல்லாத பட்சத்தில் புற்று இருக்கும் இடத்திற்கு கூட சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

இப்படி தொடர்ந்து 8 வாரம் செய்து வர திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விலகி வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US