உங்கள் வீட்டில் இந்த தவறு இருந்தால் செல்வம் குறையும்
By Kirthiga
உங்கள் வீட்டில் வாஸ்து தொடர்பான சில தவறுகளை நீங்கள் செய்தால், அது உங்களுக்கு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உதாரணமாக கூற வேண்டுமென்றால், நீங்கள் கடனில் மூழ்கலாம் மற்றும் உங்கள் வீட்டிற்கு வறுமை வரலாம்.
எனவே நீங்கள் என்ன மாதிரியான வாஸ்து குறிப்புகளை பின்பற்றலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- வீட்டின் பிரதான நுழைவாயிலில் இருள் சூழ்ந்தால், செய்யும் வேலைகள் கெட்டுப்போகும், இதனால், கடினமாக உழைத்தாலும், பல வேலைகளில் வெற்றி பெற முடியாது.
- உடைந்த புகைப்படங்களை வீட்டில் வைக்கக் கூடாது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், ஏனெனில் அது குடும்ப உறவுகளை கெடுக்கும்.
- வீட்டில் உள்ள உடைகள், செருப்புகள், காலணிகளை அங்கும் இங்கும் வீசினால் அது வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தலாம்.
- வீட்டில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை முழுமையாக திறந்து வைக்காதீர்கள். இப்படிச் செய்வதால் மனக்கசப்பும், எதிர்மறைச் சக்தியும் வீட்டிற்குள் நுழையலாம்.
- குழாயை திறந்து விட்டு தண்ணீர் வரவதை பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாது. இதனால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாசனை திரவியங்கள் போன்றவற்றை இரவில் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் வலுவான வாசனை உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தியை ஏற்படுத்தும்.
- வீட்டில் வௌவால்கள் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது, இதன் காரணமாக, வாஸ்து குறைபாடுகள் எப்போதும் உங்கள் வீட்டில் இருக்கும்.
- உங்கள் குளியலறை சமையலறைக்கு எதிரே அல்லது அருகில் இருக்கக்கூடாது.
பரிகாரம்
உங்கள் நிதி நிலை மோசமாக இருந்தால், நீங்கள் மாலையில் பால், தயிர் மற்றும் உப்பு போன்றவற்றை தானம் செய்வது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |