12 ராசிக்காரர்கள் உடைய மறைமுக குணாதிசயங்கள் என்ன தெரிந்து கொள்வோம் வாங்க

By Sakthi Raj Sep 10, 2026 01:30 PM GMT
Report

12 ராசிக்காரர்களுக்கும் அவர்களுடைய ராசிநாதரை பொருத்து அவர்களுடைய குணாதிசயங்கள் மாறும். அந்த வகையில், ஒவ்வொருவருடைய குணமும் வெளிப்படையாக தெரிந்தால் ஒவ்வொருவருக்கு பின்னாலும் மறைமுக குணமும் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

12 ராசிகளில் மிகவும் ரோஷக்கார ராசிகள் யார் தெரியுமா? முடிவை மாற்றவே மாட்டார்களாம்

12 ராசிகளில் மிகவும் ரோஷக்கார ராசிகள் யார் தெரியுமா? முடிவை மாற்றவே மாட்டார்களாம்

மேஷம்:

இவர்கள் முன்கோபக்காரர்கள் ஆனால் எளிதில் ஏமாந்து விடுவார்கள்.

ரிஷபம்:

இவர்கள் பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார்கள். ஆனால், எல்லா விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

மிதுனம்:

இவர்கள் மிகவும் தெளிவாக இருக்க கூடியவர்கள். இவர்களை ஏமாற்றுவது சாத்தியமே இல்லை.

கடகம்:

பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் கோபம் வந்தால் மிகப்பெரிய அளவில் இருக்கும்.

12 ராசிக்காரர்கள் உடைய மறைமுக குணாதிசயங்கள் என்ன தெரிந்து கொள்வோம் வாங்க | Hidden Personality Traits Of 12 Zodiac Signs

சிம்மம்:

இவர்கள் பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார்கள். ஆனால் இவர்களால் ஒரு நிமிடமும் தனிமையில் வாழவே முடியாது.

கன்னி:

எல்லா விஷயங்களையும் சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சோம்பேறித்தனம் சற்று அதிகம் இருக்கும்.

துலாம்:

இவர்கள் வெளியே தைரியமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே நிறைய நடுக்கங்கள் வைத்திருப்பார்கள்.

விருச்சிகம்:

இவர்களுக்கு அதிக அளவில் பிடிவாத குணம் இருந்தாலும் நல்ல மனம் படைத்தவர்கள்.

விநாயகர் சதுர்த்தி: விநாயகருக்கு எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன்

விநாயகர் சதுர்த்தி: விநாயகருக்கு எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன்

தனுசு:

வெளியே சிரித்துக்கொண்டே இருந்தாலும் உள்ளே அதிக அளவில் சோகத்தை மறைத்திருப்பார்கள்.

மகரம்:

எப்பொழுதும் டென்ஷன் ஆகவே இருக்கக்கூடியவர்கள். ஆனால், குழந்தை மனம் கொண்டவர்கள்.

கும்பம்:

கூட்டத்துடன் இருக்க விரும்பினாலும் அதிக அளவில் இவர்கள் தனிமை தான் நாடி செல்வார்கள்.

மீனம்:

வெளியில் பார்ப்பதற்கு மிகவும் வெகுளி மாதிரி தெரிந்தாலும் உள்ளுக்குள் தெளிவாக இருக்கக்கூடியவர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US