ஒரு முறை தரிசித்தால் 1000 சிவாலயங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் தலம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவிலில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளை கொண்டது.
தமிழ்நாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 200வது ஆலயம் ஆகும்.
இந்த காளையார்கோவில் தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இங்கு சோமேஸ்வரர், சொர்ணகாளீஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூன்று சிவன் சன்னிதிகளும், சவுந்தரநாயகி, சொர்ணவல்லி, மீனாட்சி என மூன்று தாயார் சன்னிதிகளும் அமைந்துள்ளன.
மேலும், வெளி மண்டபத்தில் மூன்று ஆண் தெய்வங்களும், மூன்று பெண் தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர்.
இத்தலத்தில் வழிபட்டதும் ஆயிரம் சிவாலயங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதன் அடிப்படையிலே இங்கு 1000 லிங்கங்களால் உருவான சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இக்கோவிலின் கோபுரத்திலிருந்து பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும் விதத்தில் கட்டிட அமைப்பை அமைந்துள்ளது.
மேலும், சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவம் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







