நினைத்தது நடக்க ஹோலி பண்டிகை அன்று செய்யவேண்டிய பரிகாரம்
இன்று(14-03-2025) இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்டுள்ளது. இந்த நாள் பல வண்ணங்கள் நிறைந்த நாள் மட்டும் அல்லாமல் இறை வழிபாட்டிற்கும் உரிய நாள்.
அப்படியாக, இந்த நாளில் நாம் சில பரிகாரங்கள் செய்து வழிபட நாம் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
இனிப்பு வழங்குவது:
இந்த ஹோலி பண்டிகை அடுத்து நாம் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு இனிப்புகள் வழங்குவது சிறந்த பலனை கொடுக்கும்.
இந்தியாவில் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை அன்று வீடுகளில் இனிப்பு தயார் செய்து, அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டாடும் வழக்கம் உள்ளது. இவ்வாறு செய்ய நம்முடைய வாழ்க்கையில் துன்பம் விலகி இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை.
வாஸ்து பரிகாரம்:
ஹோலி என்றால் முதலில் நமக்கு வண்ணங்கள் தான் நினைவிற்கு வரும். அப்படியாக இன்றைய தினத்தில் பச்சை, சிவப்பு, மற்றும் மஞ்சள் நிறங்களை வீட்டில் உபயோகித்தால் செல்வ வளம் பெருகும்.
முடிந்தவர்கள் இந்த நிறங்களில் ஏதேனும் பொருட்கள் வாங்கி பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் லட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.
காயத்ரி மந்திரம்:
மந்திரங்களில் காயத்ரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் ஆகும். ஹோலி பண்டிகை அன்று காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும். அதை நாம் இந்த அற்புதமான நாளில் ஜெபித்து வழிபட நம் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல் பெருகுவதோடு, முன்னேற்ற பாதை பிறக்கும்.
குங்கும பூஜை:
பொதுவாகவே, அம்பாளுக்கு குங்கும பூஜை செய்வது என்பது அற்புத பலன் அளிக்கும். அப்படியாக, ஹோலி பண்டிகை அடுத்து மஹாலக்ஷ்மி தேவியை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய, வாழ்க்கையில் உண்டான தடங்கல் விலகும்.
அதோடு, நாம் அர்ச்சனை செய்த் குங்குமத்தை நம் வீட்டிற்கு எடுத்து சென்று பூஜை அறை, மற்றும் நாம் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து வர பொருளாதார நெருக்கடிகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |