சுகபோகங்களையும் அதிர்ஷ்டத்தையும் அருளும் அசுரகுரு சுக்கிரன்
நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்கிறார். பிருகு முனிவருக்கும், புலோமிசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர்.
உச்சநிலை கிரகம், மூலக்கிரகம் என்றும் கூறப்படுவதுண்டு. நீர்க்கிரகம், பெண்கிரகம், வெண்மை நிறமுடையவராதலால் வெள்ளி என்ற பெயரும் உண்டு.
அசுரர்களுக்கு குரு என்பதால் 'அசுரகுரு' என்ற பெயரும் உண்டு. தன்னை வழிபடுபவர்களுக்கு நன்மதிப்பையும், சுகபோகங்களையும், அதிர்ஷ்டத்தையும் அளிப்பவர்.
இவர் கலா ரசிகர். அழகானவர், கலாவல்லவர், கவிஞர், சுக்ரநீதி என்ற நீதி சாஸ்திரத்தை எழுதியவர். சுக்கிரனுக்குரிய நாள் வெள்ளிக்கிழமை. இது இரு கண்ணுடைய நாள்.
திசை கிழக்கு. ஒரு ராசியை கடக்க ஆகும் காலம் ஒரு மாதம். ஒருவருடைய ஜாதகத்தில் மனைவியின் நிலை, இசை, நாட்டியம் போன்ற கலைகள், இன்பம் ஆகியவை சுக்கிரனை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.
இவர் வாகனகாரகன் என்றும் சொல்லப்படுகிறார். வாகனங்கள் வைத்து ஆளக்கூடிய அம்சத்தை தருபவர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |