ஜோதிடம்: கட்சி ஆரம்பித்து 2 வருடங்களில் தலைவர் விஜய் முதலமைச்சரானது எப்படி?

By Sakthi Raj May 10, 2026 10:43 AM GMT
Report

தமிழகம் முழுவதும் பேசும் பொருளாக இருப்பது கட்சி தொடங்கி இரண்டு வருடங்களில் ஆட்சியை பிடித்த தலைவர் விஜய் அவர்களை பற்றி தான். அதாவது எப்படி ஒரு மனிதன் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய உயரத்தை தொடமுடியும் என்கின்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது.

அப்படியாக, இங்கு நாம் ஒரு சில விஷயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாக உள்ளது. அதாவது, விஜய் முதலமைச்சர் ஆவாரா? அல்லது மீண்டும் நடிக்க செல்வாரா என்கின்ற பேச்சு வார்த்தை தேர்தலுக்கு முன்பிருந்தே பல இடங்களில் பேசப்பட்டு வருகிறது.

ஏன் பல ஜோதிடர்கள் அவர்கள் விஜயின் ஜாதகத்தை வைத்து அவர் ஆட்சி அமைப்பாரா ? இல்லையா என்பதைப் பற்றிய நிறைய வாக்குவாதம் செய்தார்கள். ஆனால், இவை எல்லாம் கடந்து நாம் ஒரு தனி மனிதனாக இன்று உருவெடுத்து இருக்கக்கூடிய அந்த மனிதரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை என்ன? ஜோதிடம் நமக்கு மிக உணர்த்தக் கூடியது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

ஜோதிடம்: கட்சி ஆரம்பித்து 2 வருடங்களில் தலைவர் விஜய் முதலமைச்சரானது எப்படி? | How Actor Vijay Become Chief Minister In Two Years

சமீபகாலமாக விஜய் அவர்கள் சர்க்கார் திரைப்பட விழாவில் பேசியது பரவலாக பரவி வருகிறது. அதில் அவர் "ஒரு மனிதன் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் காலம் அதற்கான நெருக்கடிகளை கொடுத்து அவனை அந்த இடத்திற்கு கூட்டிச்செல்லும்" என்பது போல் தலைவர் விஜய் அவர்கள் அந்த விழாவில் பேசி இருப்பார்.

இங்கு தான் நாம் ஜோதிட கணக்குகளை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது நம்முடைய ஜாதகத்தில் கிரகங்கள் உங்களுக்கு ஒரு பலனை கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் உங்களை அறியாமல் அந்த இடத்திற்கு அல்லது அந்த வேலையை செய்ய அந்த கிரகமானது உங்களை தூண்டும்.

அதேபோல் தான் விஜய் அவர்கள் நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும் அரசியலில் எந்த ஒரு பின்புலமும் இல்லாத ஒரு தனிநபராக இன்று அவருடைய ஆட்சியை அவர் பிடித்து இருக்கும் இந்த நிலை நமக்கு உணர்த்துகிறது. அதாவது நமக்கான ஒன்று கட்டாயம் இந்த காலத்தினால் நம் கைகளுக்கு கொண்டு வந்து சேர்க்கப்படும்.

இது தலைவர் விஜய்க்கு மட்டுமல்லாமல் விஜய் கட்சியில் இருக்கக்கூடிய அத்தனை நபர்களுக்கும் பொருந்தும். ஆக, வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நடக்க வேண்டும் என்றால் நாம் நம்மை முழுமையாக நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை தான் நம் எதிர்காலம். நாம் நம்முடைய கடமையை செய்வதில் தவறாமல் இருந்துவிட்டால், நமக்கான உரிய விஷயத்தை காலம் எவ்வளவு பெரிய எதிரிகள் நம்மை சூழ்ந்து இருந்தாலும் அவற்றை எல்லாம் உடைத்து நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

ஜோதிடம்: கட்சி ஆரம்பித்து 2 வருடங்களில் தலைவர் விஜய் முதலமைச்சரானது எப்படி? | How Actor Vijay Become Chief Minister In Two Years

ஆக, தமிழ்நாட்டில் நடந்திருக்க கூடிய இந்த அரசியல் மாற்றமானது அரசியலில் மட்டும் அல்லாமல் நம்முடைய மன ரீதியாகவும் இது ஒரு மாறுதலை கொடுக்கக் கூடியதாகவே அமைகிறது.

இனிவரும் காலங்களில் நாம் எதற்கும் துவண்டு போகாமல், எதிரிகளை வீழ்த்துவதில் அதிக கவனம் செலுத்தாமல் நாம் நம்மை முன்னேறிச் செல்வதற்கான வழிமுறைகளை சரியாக பயன்படுத்தி விட்டால் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் காலம் மாறும்பொழுது கிரக நிலைகள் மாறும் பொழுது நிச்சயம் உங்களுக்கான சிம்மாசனத்தை இந்த பிரபஞ்சம் கொடுக்கும்.

உங்களுக்கான ஒரு விஷயம் உங்களிடம் வந்து சேர வேண்டும் என்றால் அதற்காக இந்த பிரபஞ்சமே போராடும் என்பதற்கு தலைவர் விஜய் அவர்கள் இன்று முதலமைச்சராக பதவி ஏற்று இருப்பது நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

அதைப்போல் பலரும் விஜயின் ஆட்சியை இன்னும் ஒரு வருடம் அல்லது 3 மாதம் தான் என்று விமர்சனம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கடந்து நாம் முதலில் ஒரு நேர்மறையாக நடந்திருக்க கூடிய விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது அவசியம் இருக்கிறது. வாழ்க்கை என்பது இரு பக்கங்கள் கொண்டது. பிரச்சனையோ குழப்பமோ இல்லாத வாழ்க்கையை நாம் எதிர்பார்க்க முடியாது.

இங்கு முதலில் நமக்கு சாதகமாக நடந்திருக்க கூடிய விஷயத்தில் கவனம் செலுத்தி விட்டால் எதிர்காலங்களில் வரக்கூடிய விஷயங்களை நாம் எளிதாக சமாளித்து விடலாம். வெற்றியை கொடுத்த கிரகங்கள் குழப்பங்களை சமாளிக்கும் ஆற்றலையும் கொடுக்கும்.ஆக நம்பிக்கையோடு மனம் தளராமல் பொறுமை கொண்டால் காலம் மாறும் பொழுது வாழ்க்கை மாறுவதை நாம் ரசிக்கலாம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US