12 ராசிகளுக்கும் கடவுள் எந்த வழியில் பாடத்தை கற்றுக் கொடுப்பார் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நன்மை தீமை என்ற இரு குணம் உண்டு. அந்த வகையில் அவர்கள் கட்டாயமாக வாழ்க்கையில் இறுதியில் அவர்களுடைய பிழை மற்றும் அவர்களுடைய குறைகளை திருத்திக் கொண்டு வாழ்வதற்கான வழிவகைகளை அந்த கிரகங்களானது அமைத்துக் கொடுக்கும்.
அப்படியாக, 12 ராசிகளுக்கும் கடவுள் எந்த வலியை கொடுத்து அவர்களுடைய வழி யை மாற்றுவார் என்று அதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்களுடைய அவசரத்தை மிகவும் சோதித்து பிறகு இவர்களுக்கு பொறுமையை கற்றுக் கொடுப்பார்.
ரிஷபம்:
இவர்களுடைய பிடிவாதத்தை சோதித்து பிறகு பிறகு விட்டுக் கொடுக்கும் தன்மையை கற்றுக் கொடுப்பார்.
மிதுனம்:
இவர்களுக்கு முதலில் கவன சிதறலை உண்டு செய்து பிறகு தெளிவான மனநிலையை கொடுக்கிறார்.

மீனம்:
இவர்களுடைய மனதை சோதித்து பிறகு மன உறுதியை வழங்குகிறார்.
சிம்மம்:
இவர்களுடைய அகந்தையைப் பெரும் அளவு சோதித்து பிறகு கருணையை வெளிப்படுத்த செய்கிறார்.
கும்பம்:
இவர்களுடைய கவலையை சோதித்து பிறகு இவர்களுக்கு நிம்மதி அடைய வழிகாட்டுகிறார். துலாம்: இவர்களுடைய தயக்கத்தை அதிக அளவில் சோதித்து பிறகு சரியான பாதையை தேர்ந்தெடுத்து நடக்கச் செய்கிறார்.
விருச்சிகம்:
இவர்களுக்கு சந்தேக உணர்வை உண்டு செய்து பிறகு நம்பிக்கையை பெற வைக்கிறார். தனுசு: இவர்களுக்கு நம்பிக்கையை சோதித்து பிறகு உண்மையை வழங்குகிறார்.
மகரம்- கன்னி -கடகம்:
இந்த ராசியினருக்கு மிகப்பெரிய அளவில் கஷ்டங்களையும் சோதனைகளையும் இறைவன் கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழியையும் இறைவன் எப்பொழுதும் கொடுக்கிறார்.