உங்கள் ஜாதகத்தில் கேது பகவான் என்ன பலன் கொடுப்பார் தெரியுமா?

By Sakthi Raj Apr 18, 2026 06:14 AM GMT
Report

ஜோதிடத்தில் கேது நிழல் கிரகமாக இருக்கிறார். மேலும், இவர் ஞானத்தை வழக்ககூடிய கிரகமாக இருக்கிறார். அதாவது, மனிதர்களுக்கு இந்த உலகத்தில் எது உண்மை? எது மாயை? என்று தெளிவாக உணர்த்தகூடியவர்.

மனிதர்கள் பல நேரங்களில் போலியான விஷயங்களில் சிக்கிக் கொள்வது உண்டு . பிறகு அதனால் அவர்களுக்கு துன்பமும் அதனால் அவர்களுக்கு மன அழுத்தமும் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தத்தை போக்க கூடியவர் தான் கேது பகவான்.

முதலில் கேது பகவான் கொடுக்கக்கூடிய கஷ்டங்கள் நமக்கு மன அழுத்தமாக தெரிந்தாலும் அது அவர் நம்மை ஆன்மீக பாதையில் கூட்டி சென்று நம் மனதை செம்மையாக்ககூடிய அத்தனை வேலைகளையும் சரியாக செய்து விடுவார்.

உங்கள் ஜாதகத்தில் கேது பகவான் என்ன பலன் கொடுப்பார் தெரியுமா? | How Kethu Bagavan Works In Horoscope

2026: பாபா வாங்கா: இந்த ஆண்டு முடிவதற்குள் இந்த ராசிகளுக்கு இது கட்டாயம் நடக்குமாம்

2026: பாபா வாங்கா: இந்த ஆண்டு முடிவதற்குள் இந்த ராசிகளுக்கு இது கட்டாயம் நடக்குமாம்

மேலும், கேது தசா புத்திகள் நடக்கின்ற பொழுது பலரும் விரக்தியான நிலைக்கு தள்ளப்படுவோம் என்று அச்சப்படுவது உண்டு. ஆனால் ஜாதகத்தில் கேது பகவான் அமர்ந்திருக்க கூடிய இடம் பொறுத்து தான் கேது பகவான் நன்மை தீமை செய்கிறார்.

இருப்பினும் கேது பகவான் கெட்டதே செய்தாலும் இறுதியில் அந்த மனிதனை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்தக்கூடிய நன்மை கொடுத்து விடுவார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

அப்படியாக, ஒருவர் ஜாதகத்தில் கேது பகவான் எவ்வாறு செயல்படுவார் என்பதை பற்றி நாம் இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US