ஒருவருடைய ஜாதகத்தில் கேது பகவான் எவ்வாறு வேலை செய்கிறார்
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் நிழல் கிரகங்களாக இருக்கக்கூடியது ராகு மற்றும் கேது. இந்த ராகு மற்றும் கேது பகவான் எந்த கிரகங்களோடு இணைந்து இருக்கிறார்களோ அதற்கு தகுந்தாற்போல் அவர்களுடைய தாக்கங்கள் அந்த ஜாதகருக்கு கிடைக்கிறது. பொதுவாக இந்த கேது கிரகத்தை பாவ கிரகம் என்று சொல்லுவார்கள்.
காரணம் கேது கிரகத்தோடு இணைந்து இருக்கக்கூடிய கிரகமானது பல எதிர்மறை தாக்கங்களை பெற கூடும் என்பது கருத்துக்களாக இருக்கிறது. அதாவது கேது சுக்கிரனோடு இணைந்து இருந்தால் அந்த ஜாதகர் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதில் சில சிக்கல்களை சந்திக்கலாம் என்பது ஒரு வகையான கருத்து.
அதுவே கேது செவ்வாய் பகவானோடு இணைந்து இருக்கிறது என்றால் அந்த ஜாதகர் கோபம் வந்தாலும் கோபம் கொள்வதில் தயக்கம் மற்றும் மனதளவில் பலவீனமாக இருக்கக்கூடிய நிலை உருவாகும். அதனால் கேது என்றால் பலருக்கும் அச்சம் உருவாகிறது. அப்படியாக ஒருவர் ஜாதகத்தில் கேது பகவான் எவ்வாறு வேலை செய்கிறார் கேது பகவானுடைய வேலை என்னவென்று பார்ப்போம்.
கேது பகவான் எந்த கிரகத்தோடு இணைந்து இருக்கிறாரோ அந்த கிரகத்தின் உடைய பாடத்தை நமக்கு கற்பித்து கொடுப்பதற்காக அவர் நம் வாழ்க்கையில் இருக்கிறார். அதாவது கேது பகவான் நமக்கு ஒரு விஷயத்தை முழுமையாக கற்றுக் கொடுத்து அதன் வழியாக நம் வாழ்க்கையில் பயனடைந்து மேன்மை அடைவதற்கான அனைத்து வழிகளையும் காட்டக் கூடியவர்.
முதலில் ஏக்கத்தை கொடுப்பார் கேது. பிறகு அந்த ஏக்கம் குறைந்து தனக்கு அந்த பொருள் வேண்டாம் என்று நினைக்கும் பொழுது அந்தப் பொருளின் உண்மை தன்மையை உணர்த்தி அதை அவர்களுக்கு கையில் கொடுத்து நிலையாக மாற்றக்கூடியவர் கேது பகவான்.
உதாரணமாக ஒருவருக்கு சுக்கிரனுடன் கேது இருக்கிறார் என்றால் அந்த ஜாதகருக்கு சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்று முதலில் ஆசையை கொடுத்து பிறகு அந்த வாழ்க்கை வாழ்ந்தால் வரக்கூடிய நன்மை தீமைகளை உணரச் செய்த அதன் வழியே நமக்கு ஒரு நிலையான இன்பம் கொடுக்கின்ற வாழ்க்கையை நமக்கு அவர் கொடுக்கிறார்.
பொதுவாக கேதுவின் வேலை ஒருவர் எதன் மீதும் அதிகப்பற்ற வைக்காமல் பார்த்துக் கொள்வது ஆகும். பிறகு அதன் வழியே அந்த ஜாதகர் பயன் பெற்று வாழ்கையில் உயர்நிலையை அடையச் செய்வார் ஆதலால் கேது பகவானை கண்டு யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை. கேது பகவான் ஒருவரை நிலையான வாழ்க்கைக்கு அழைத்து செல்வதற்கான அனைத்து பாடங்களையும் கற்றுக் கொடுக்கக் கூடியவ.
மேலும் கேது பகவான் எந்த கிரகங்களோடு இணைந்து இருக்கிறாரோ அந்த கிரகத்தினுடைய உறவு துண்டிக்கப்படும் என்றும் ஒரு சில கருத்துக்கள் இருக்கிறது. அதாவது நாம் எந்த உறவின் மீது அதிக விருப்பம் கொள்கின்றோமோ அந்த உறவின் வழியாக நமக்கு சில பாடங்களை கற்றுக்கொடுத்து அதன் வழியே மேன்மை அடைய செய்கிறார்.
அதாவது ஒரு சில உறவுகள் மீது நம் அதிக அன்பு வைத்திருப்போம். அந்த அன்பே சமயங்களில் நம்மை முன்னேற செய்வதற்கான ஒரு தடங்கலாக இருக்கலாம். ஆதலால் அந்தத் தடைகளை விலக்கி உண்மை நிலையை அறிய செய்யக்கூடியர் கேது பகவான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







