உலகில் மொத்தம் எத்தனை வகையான மனிதர்கள்
நாம் அனைவரும் அறிவோம்.திருமாலின் வாகனம் கருடன் என்று.அப்படியாக ஒரு சமயம் பெருமாள் கருடனிடம் பேசி கொண்டு இருக்க.கருடா இந்த உலகில் மொத்தம் எத்தனை வகையான மனிதர்கள் என்று அவர் கேட்கிறார்.அதற்கு கருடன்,பரமாத்மா இந்த உலகில் மொத்தம் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்றார்.
உடனே பெருமாள்,என்ன கருடா சொல்ற!இத்தனை கோடி மக்களில் வெறும் மூன்று வகையான மனிதர்கள் தான் இருக்கிறார்களா என்றார்.கருடன் ஆமாம் பரமாத்மா,எல்லாம் உலகை அறிந்த நீங்கள் என்னிடம் இவ்வாறு தெரியாதது போல் கேட்பது சரிதானா என்று கருடன் மனிதர்களின் வகைகளை சொல்ல தொடங்கினான்.
பரமாத்மா!பறவையும் அதன் குஞ்சுகளும் போல முதல் வகை மனிதர்கள் உள்ளனர்.பசுவும் அதன் கன்றையும் போல் இரண்டாம் வகையினர் உள்ளனர். கணவனும் மனைவியும் போல் மூன்றாம் வகையினர் உள்ளனர். இதுதான் நான் அறிந்தது," என்றார். உடனே பெருமாள்!கருடா நீ சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை விளக்கமாக கூறு," என்றார்.
1.அதற்கு கருடன், முதலில், 'பறவையும் அதன் குஞ்சுகளும் போல' என்றால் பறவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது.பிறகு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் அந்த குஞ்சுகளையே உண்டு விடுகின்றன.திரும்பி வந்து பார்க்கும் பறவை காணாமல் போன தன் குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலைப் படுவதில்லை.
அத்துனுடைய குஞ்சுகள் உயிருடன் இருந்தால் உணவு ஊட்டும் அவ்வளவே.அதே போல் வளரத் தொடங்கிய குஞ்சுகள் பறக்க முயற்சி செய்து அறியாமல் கீழே விழுந்து மடியும். சில பறவைகள் மட்டும் பறக்க கற்றுக் கொண்டு வாழும். இதுபோலதான் முதல் வகை மனிதர்கள்.
உலகை பற்றிய பெரிய புரிதல் இருக்காது.கிடைக்கும் வேலையை செய்வார்கள். கிடைத்ததை உண்பார்கள். இல்லை என்றால் பட்டினி கிடப்பார்கள். அவர்களுக்கு தன்னை பற்றியே தெரியாது.நாட்களை கழிப்பார்கள்.
2.இரண்டாவது வகை மனிதர்கள் பசுவும் கன்றும் போல.பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும். கன்று ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும்.கன்று பசித்தால் தன் தாயை பார்த்து சப்தமிடும்.ஆக கன்றுவுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தன்னுடைய பசி அடங்கிவிடும்.
ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிறு அதனை தன் தாயிடம் செல்ல விடாமல் தடுக்கிறது. கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும். அது போல ஒரு சில மனிதர்களுக்கு உன்னை பற்றி தெரியும்.உன்னை அடைந்தால் மட்டுமே வாழ்வு சுகமாகும் என்று உஙர்த்திருப்பார்கள்.ஆனாலும் உன்னிடம் வர முடியாமல் பாசம் என்ற கயிற்றில் மாட்டிக்கொண்டு தவிப்பார்கள்.
3.மூன்றாவது வகை மனிதர்கள் கணவனும் மனைவியும் போல.சிறிய நாள் அறிமுகத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ தொடங்குவார்கள்.கணவனின் பாசம் பெற அவனைப் பார்த்த நாளிலிருந்து அவனுக்கு பிடித்த வகையில் எல்லா வேலைகளும் செய்து அவனுக்காகவே தான் பிறந்தவள் என்று நிரூபிக்க துடிப்பாள்.
முதலில் ஒதுங்கிய அவன், பின்பு அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடமெல்லாம் செல்கிறான். அவளை பிரிய மனம் வருவதில்லை.அதே போல் காலப்போக்கில் உன்னை பற்றி அறியாமல் ஒதுங்கி நடந்தவர்கள் உன்னை அறிந்து பிறகு நீயே கதி என்று சரண் அடைந்து விடுகின்றனர். என்றார் கருடன். அதனை கேட் மஹாவிஷ்ணு மனம் மகிழ்ந்து கருடனை வாழ்த்தினார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |