உங்களிடம் உள்ள தெய்விக சக்தியை உணர்த்தும் கனவுகள்
கனவுகள் வருவது இயல்பானது என்றாலும் அவை நம் வாழ்க்கை தொடர்புடைய விஷயமாகவே உள்ளது.சிலருக்கு கனவுகள் அவர்கள் எதிர்கால வாழ்க்கையை பற்றி உணர்த்துவதற்கு வரும்.பெரும்பாலாக அதிகாலையில் வரும் கனவுகள் அதாவது காலை 4:30 முதல் 5:30 மணிக்குள் வரும் கனவுகள் வருங்காலத்தை சொல்லக்கூடிய எச்சரிக்கை என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறான கனவுகள் யாருக்கு வருகிறதோ அவர்கள் அதிக தெய்வ சக்திகள் கொண்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரு சிலருக்கு கனவில் கோயிலின் கோபுரம் அல்லது சுவாமி சிலைகள் வருவதுண்டு.இவ்வாறு வருகின்றது என்றால் அந்த நபர் மனதளவில் மிகவும் தூய்மையான நபராகவும் தெய்விக ஆற்றல் உடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
அதே போல்,சிலருக்கு தெய்வ வாக்குகள் கனவில் வருவதுண்டு.அதாவது தெய்வம் இவர்களிடம் வந்து பேசும்.எதிர்காலம் பற்றிய சில விடைகளை கொடுக்கும்.அது அவர்கள் வாழ்க்கையில் தெய்வம் கனவில் சொன்னது போல் நடப்பதையும் பார்க்க முடியும்.
அதே போல கனவில் அம்பு, வில், காளை மாடு, வேல், மயில், விபூதி, குங்குமம், வேப்பிலை, எலுமிச்சை, சூலம் போன்ற கடவுள் சம்பந்தமான பொருட்கள் வந்தால், அந்தக் குறிப்பிட்ட கடவுளின் அனுகிரகம் உங்களுக்கு இருப்பதாக அர்த்தம்.
சிலருக்கு மிகவும் ஆக்ரோஷமான தெய்வங்கள் கனவில் வருவதுண்டு.அதாவது உக்கிர தெய்வமான காளி, வாராகி அம்மன், உக்கிரமான ஆண் தெய்வங்கள் துணையாக இருப்பதாக அர்த்தம்.சிலருக்கு சித்தர்கள் கனவில் வந்து அருள்புரிவார்கள்.அவ்வாறு வரும் பொழுது அவர்களுக்கு வாழ்க்கையில் சித்தர்களின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |