உங்கள் கெட்ட நேரம் உங்களை விட்டு விலகுவதற்கான அறிகுறிகள்
காலம் போல் ஒரு மனிதனுக்கு நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.உண்மையில் மனிதன் போராடுவது சக மனிதனோடு இல்லை.இந்த காலத்தோடு தான்.இந்த காலம் நாம் செய்த பாவம் புண்ணியத்தை மறைத்து வைத்திருக்கிறது.சரியான நேரத்தில் அதற்கான பாடமும் பலனும் கொடுக்கிறது.அப்படியாக ஒருவருக்கு கெட்ட காலம் வருகின்றது என்றால் அதற்கான அறிகுறியும் காலம் கொடுக்கிறது.
அதே காலம் உங்களுக்கு சாதகமாக மாறும் பொழுது அதற்கான அறிகுறியை கொடுத்து விடுகிறது.வாழ்க்கையில் நிச்சயம் எல்லோரும் இருட்டான பாதையில் போராட்டம் செய்திருப்பார்கள்.அந்த இருட்டில் வெளிச்சம் விழுகிறது என்றால் பிரபஞ்சம் நிச்சயம் அந்த அறிகுறியை காட்டுகிறது.அவை என்னவென்று பார்ப்போம்.
1.உங்களை சுற்றி நடக்கும் சில விஷயம் மாறப்போகிறது என்றால் அவை உங்களுக்கு மட்டும் அல்ல உங்களை நெருங்கியவர்களுக்கும் அந்த எண்ண அலைகள் தோன்றும்.அதாவது நீங்கள் எதிர்பார்த்து அவர்களிடம் பகிர வேண்டும் என்று எண்ணிய விஷயத்திற்கு எந்த தடங்கலும் நேர்மறையாக ஊக்குவிப்பார்கள்.
2.பொதுவாக,ஏதேனும் தவறு நடக்கப்போகிறது என்றால் நம் மனம் ஒருவிதமான இறுக்கமான சூழ்நிலைக்கு செல்லும்.ஆனால் நல்ல விஷயம் நம்மை நோக்கி வரும் பொழுது மனம் மென்மையாகும்.செயலில் நிதானம் உண்டாகும்.எடுத்த காரியம் வெற்றியாகும்.
3.அதே போல்,நீங்கள் கோயிலுக்கு செல்லும் பொழுது அல்லது வெளியில் செல்லும் பொழுது உங்கள் காரியத்திற்கான நேர்மறை ஆற்றல் பெருகும்.கோயிலுக்கு சென்றால் வேண்டுதல் வைக்கும் பொழுது மணியோசை கேட்கும், சாமி மீது இருக்கும் மலர் கீழே விழும்.இது போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு நல்ல சகுனமாக கருதப்படுகிறது.
4.நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் பல்லி நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.அதாவது நல்ல விஷயம் பற்றி பேசும் பொழுது பல்லி ஒருவித ஓசையை எழுப்பும்.அவை நாம் பேசும் காரியத்திற்கான வெற்றியை குறிக்கிறது.
5.மிக முக்கியமாக நல்ல விஷயம் நடக்கப்போகிறது என்றால் நம்முடைய மனதில் இறைநம்பிக்கை அதிகரிக்கும்.இறை வழிபாட்டில் எந்த ஒரு குழப்பமும் இருக்காது.நம்பிக்கை நிலைத்திருக்கும்.
ஆக இந்த பிரபஞ்சம் நம்மை கவனித்து கொண்டு இருக்கிறது.சிறு பூச்சி முதல் மனிதர்கள் வரை இந்த இயற்கை முழு பொறுப்பேற்று கொண்டு இருக்கிறது.காலம் வரும் பொழுது அவர் அவர் செய்யும் கடமைக்கு துணையாக ஆசானாக நின்று வழிநடத்துகிறது.காத்திருப்போம் காலம் மாறும் பொழுது வெற்றி நம் வசம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |