சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மறந்தும் செய்யக்கூடாத முக்கியமான விஷயங்கள்
வீட்டில் மஹாலட்சுமி தேவி தங்க நாம் சில சாஸ்திர விஷயங்களை கடைபிடிக்கவேண்டும் என்று இந்து மதத்தில் சொல்லப்படுகிறது.அதாவது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மறந்தும் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் அவை என்னவென்று பார்ப்போம்.
நாம் ஒரு பொழுதும் விளக்கு ஏற்றும் நேரம் உறங்ககூடாது.அவ்வாறு தூங்கும் பொழுது வீட்டில் எதிர்மறை ஆற்றல் உருவாகும்.மேலும் மாலை விளக்குஏற்றும் நேரம் தூங்கினால் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகக்கூடும் என்று சொல்கிறார்கள்.
அதோடு வீட்டில் வறுமை உண்டாகும்.அதே போல் எவ்வளவு அவசரமான விஷயமாக இருந்தாலும் மாலை நேரம் வீட்டை பெருக்கி துடைத்தல் கூடாது.சாஸ்திரங்கள் படி,லட்சுமி தேவி மாலை தான் வீட்டிற்குள் நுழைவதால் இந்த நேரத்தில் இது போன்ற காரியங்களை செய்தால் லட்சுமி தேவி வீட்டை விட்டு வெளியேறி விடுவார் என்று நம்மப்படுகிறது.
அதோடு மாலை நேரம் வீட்டை துடைப்பத்தால் வீட்டில் சேரும் செல்வம் வெளியே சென்று விடும் நம்பப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டில் உள்ள பூக்களை பறிக்கக்கூடாது.அதே போல் வீட்டில் வாழை இலை வைத்திருந்தாலும் அதையும் சாப்பிட வெட்டக்கூடாது.
அவ்வாறு செய்யும் பொழுது மஹாலக்ஷ்மியின் கடும் கோபத்திற்கு ஆளாகக்கூடும்.அதே போல் வேப்பிலை துளசி இலை போன்ற விஷயங்கள் பறிப்பதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |