பெண்களுக்கு இடது கண்கள் துடித்தால் நல்லதா?கெட்டதா?
நம் கண்கள் துடிக்கிறது என்றால் ஜோதிட சாஸ்திரத்தில் அதற்கான பல பலன்கள் சொல்லப்படுகிறது.அப்படியாக பெண்களுக்கு இடது கண்கள் துடித்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
கண் துடிப்பதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதற்கு ஜோதிட ரீதியாக சில தகவல்கள் சொல்லப்படுகிறது.
பொதுவாக கண்கள் துடிப்பதற்கு ஆண்களுக்கு ஒரு விதமாகவும் பெண்களுக்கு வேறு விதமாகவும் பலன்கள் சொல்லப்படுகிறது. உண்மையில் பெண்களுக்கு இடது கண்கள் துடித்தால் அது மிகவும் நல்ல சகுனமாக சொல்லப்படுகிறது. பெண்ணுக்கு இடது கண் துடித்தால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
புதிய ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உள்ளது.செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.பெண்களுக்கு இடது துடிக்கும் பொழுது வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் ஒன்று நடைபெறும்.
பொருளாதாரத்தில் சில நல்ல மாற்றங்கள் நடைபெறும்.வீட்டிற்கு தொலை தூரத்தில் உறவினர்கள் வருவார்கள். இது ஜோதிட சாஸ்திர சொல்லும் தகவல் என்றாலும் அறிவியல் ரீதியாக கண்களில் ஏற்படும் நரம்பு பாதிப்பு, அழுத்தம் காரணமாக கண் துடிப்பதாக சொல்லப்படுகிறது.சிலருக்கு கண்களுக்கு சரியான ஓய்வு இல்லாமல் இருந்தாலும் பாதிப்புகள் ஏற்படலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |