கலியுகத்தில் பலரது நம்பிக்கையாக முருகப்பெருமான் இருக்கிறார்.காரணம்,மனமுருகி ஒருவர் வேண்டிட அவர்கள் கேட்டதை தந்தருள்கிறார் முருகப்பெருமான்.ஆதலால்,முருகப்பெருமானுக்கு நாளுக்கு நாள் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள்.
அந்த வகையில் நாம் என்னதான் மனமுருகி முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்தாலும்,அவர் நம்முடன் தான் இருக்கிறாரா?என்று சில அறிகுறிகளால் கண்டுபிடித்து விடலாம்.அதை பற்றி பார்பபோம்.
முருகன் வழிபாடுகளில் மிக சிறந்த வழிபாடு அவருடைய மந்திரங்களை பாராயணம் செய்தல்.அந்த மந்திரத்தை இடைவிடாது ஒருவர் சொல்லி வழிபட்டு வேண்டுதல் வைக்க அவர்களுக்கு நிச்சயம் வேண்டிய காரியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அதே போல் முருகப்பெருமான் உங்களுடனே இருக்கிறார் என்பதற்கு அறிகுறி நீங்கள் வெளியில் செல்லும் பொழுது பார்க்கும் இடம் எல்லாம் முருகன் என்ற பெயர் கண்களில் தென்படும்.பலரும் நாம் அவரை மனதில் எப்பொழுதும் நினைத்து கொண்டே இருப்பதால் வரும் என்று சொல்லுவார்கள்.
எப்படியானாலும் அவர் நம் கண்ணுக்கு தெரியும் பொழுது மனதில் ஒருவித நம்பிக்கை வளர்கிறது. அடுத்ததாக திடீர் என்று உங்களை சுற்றி நல்ல நறுமணம் வீசும் அது சந்தனம் அல்லது விபூதி போன்றவையாக இருப்பது. ஏனெனில் இந்த ரெண்டு வாசங்களும் கந்தனுக்கு மிகவும் உரியதாக சொல்லப்படுகிறது.
இதை ஆலயத்தில் வழிபடும் நேரம் தவிர்த்து பிற நேரங்களில் உணர்ந்தால் நிச்சயம் முருகன் அருள் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கிறது என்று அர்த்தம்.அதுமட்டுமின்றி நாம் வீட்டில் பூஜை அறையில் பல்லி இருப்பது அதன் சத்தம் கேட்பது போன்றவை கூட இந்த அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது.
நீங்கள் எப்பொழுது எல்லாம் முருகனை நினைத்து வழிபாடு செய்கிறீர்களோ அப்பொழுது எல்லாம் உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.உங்களை அறியாமல் கண்ணீர் சிந்துவீர்கள்.
அதே சமயம் நீங்கள் பெருந்துயரத்தில் இருக்கும் பொழுது சிறு பிள்ளைகள் முருகனின் வாகனமான மயில், சேவல் போன்றவை வருவதும் முருகப்பெருமான் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார் என்று உணர்த்தும் அறிகுறி ஆகும்.
ஆக சதா இறைவனை நினைத்து வழிபட தொடங்குங்கள் மனம் செம்மை ஆகும்.மனதில் உள்ள அழுக்குகள் முற்றிலுமாக விலகும்.முருகனின் அருளும் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |