மயிலிறகை வீட்டில் வைத்திருக்கிறீர்களா??அப்போ இதை கவனிக்க தவறாதீர்கள்
பறவையில் மயிலை யாருக்கு தான் பிடிக்காது.அதே போல் மயில் என்றதும் முருகப்பெருமானின் வாகனமும் ஸ்ரீ கிருஷ்ணர் கிரீடமாக இருப்பது போன்ற விஷயங்களும் தான் நினைவிற்கு வரும்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த மயில் இறகு அதிர்ஷடத்தின் அடையாளமாக பார்க்க படுகிறது.
அப்படியாக ஒருவர் வீட்டில் மயிலிறகை வைத்திருக்க அது வீட்டிற்கு ஒருவித நேர்மறை ஆற்றல் பெற்று கொடுக்கிறது.மிக முக்கியமாக வீட்டில் மயில் இறகை வைக்க அவை வீட்டில் உள்ள பில்லி, சூன்யம், ஏவல் போன்ற தீய சக்திகளை விலக்குகிறது.
மேலும்,எவர் ஒருவர் ஆழந்த வருத்தத்தில் இருக்கின்றாரோ அவர் மயில் தோகை விரித்து ஆடுவதை பார்த்தால் அவர்கள் மனதில் உள்ள பாரம் குறையும்.மனதில் நேர்மறை சிந்தனை அதிகரிக்கும்.அது மட்டுமில்லாமல், மயிலிறகை இன்றளவும் மருத்துவத்திற்கு பயன் படுத்துகிறார்கள்.
காரணம் அதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான்.மயிலிறகை நாம் படுக்கும் இடத்தில் வைத்தால், எந்த ஒரு விஷப் பூச்சிகளுள் நம்மை நெருங்காது என்று சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் ஏதேனும் பயத்தில் அழுது சாப்பிட தயங்கினால் மயிலிறகை அவர்கள் தலையில் வைத்து நீவி விடும்போது அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் விலகுகிறது.
இதை தான் பள்ளிவாசலில் பிரச்னை என்று வரும் மக்களுக்கு மயிலிறகை வைத்து தலையில் நீவி விடும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். ஆக பல அற்புதம் நிறைந்த மயில் இறகை வீட்டில் வைக்க வீட்டில் வைக்க அதிக அளவில் பாசிட்டிவ் எனர்ஜி உருவாகிறது.
அதோடு குழந்தைகள் அருகில் மயில் இறகை வைக்கும் பொழுது குழந்தைக்கு இருக்கும் பட்சி தோஷம், திருஷ்டி போன்றவை கழியும்.நாமும் வீட்டில் மயில் இறகை வைத்து நேர்மறை சிந்தனைகள் பெருக்கி சந்தோஷமாக வாழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |