வீழ்ந்தாலும் மீண்டும் வருவது எப்படி? அனுமன் உணர்த்தும் பாடம் என்ன?
நம்முடைய வாழ்க்கையில் நாம் நிறைய துன்பங்களை சந்திக்கின்றோம். அந்த துன்பத்திலிருந்து மீண்டு வருவது என்பது நம்மிடம் இருக்கக்கூடிய தன்னம்பிக்கையாக இருந்தாலும் பல நேரங்களில் இறை அருளால் மட்டுமே அது சாத்தியமாகிறது.
மேலும், நாம் ஒவ்வொரு ஆன்மீக கதையை உற்று நோக்குகின்ற பொழுது இறைவன் நமக்கு வாழ்க்கையில் முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுக்கிறார்.
இந்த வாழ்க்கை என்பது பெயர், புகழ், பணம் சம்பாதித்தோம் என்று மட்டுமல்லாமல் இந்த வாழ்க்கை அறத்தோடு எப்படி வாழ்கின்றோம் என்பதை பொறுத்தே நமக்கு நன்மை தீமைகள் கிடைக்கிறது.
அந்த வகையில், மகாபாரதத்தில் மிகவும் வலிமையான குணம் படைத்த அனுமன் நமக்கு பல்வேறு வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொடுக்கிறார்.
அதாவது எந்த நிலையிலும் துவண்டு போகாமல் மனதில் தைரியம் இருந்தால் மீண்டும் எழக்கூடிய பக்குவம் கிடைக்கும் என்பதற்கு அனுமன் மிகப்பெரிய சான்று.
அந்த வகையில் ஒருவர் வீழ்ந்தாலும் மீண்டும் எப்படி எழுவது என்பதை பற்றி நமக்கு பல்வேறு முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் யோகி பிரகாஷ் அவர்கள். அதைப் பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.