மகாபாரதம்: மனதை அடக்குவது என்பது காற்றை அடக்குவதைப் போல கடினமானது..

By Sakthi Raj Sep 26, 2026 07:46 AM GMT
Report

ஒரு மனிதனுடைய மிகப்பெரிய வலிமை எது என்று கேட்டால் பலரும் பல பதில்களை சொல்வதுண்டு. ஆனால், உண்மையில் ஒரு மனிதனை வழிநடத்தக்கூடிய மிகப்பெரிய சக்தியும் அவருடைய வலிமையும் அவருடைய மனம் ஆகிறது. இந்த மனமானது நம்முடைய கட்டுப்பாட்டில் இருந்து விட்டால் எதையும் சாதித்து விடலாம்.

ஆனால், கட்டுப்பாடு இல்லாமல் இருக்கின்ற பொழுது நம் வாழ்க்கை திசை தடுமாறி பல பிரச்சினைகளை சந்திக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய எல்லா கஷ்டங்களுக்கும் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் நமக்கு பல விஷயங்களை விட்டு சென்றிருக்கிறார்.

அந்த வகையில், பகவத் கீதையில் ஆறாம் அத்தியாயமான "தியான யோகம்" பகுதியில் நம்முடைய மனதை கட்டுப்படுத்துவதின் சிரமங்களை பற்றி அர்ஜுனர் கிருஷ்ணரிடம் கூறுகிறார்.

மகாபாரதம்: மனதை அடக்குவது என்பது காற்றை அடக்குவதைப் போல கடினமானது.. | How To Controlling Mind Is Like Controlling Wind

மகாபாரதம்: இழப்புகள் முடிவு அல்ல.. அதுவே புதிய தொடக்கம்..

மகாபாரதம்: இழப்புகள் முடிவு அல்ல.. அதுவே புதிய தொடக்கம்..

அதாவது, அர்ஜுனன் சொல்கிறார் நம்முடைய மனமானது நிலையற்றது, கொந்தளிப்பானது, வலிமையானது, பிடிவாதமானது இவ்வளவு விஷயங்களை கொண்டு மனதை கட்டுப்படுத்துவது என்பது காற்றை கட்டுப்படுத்துவது போல் மிகவும் கடினமான ஒன்றுதான் என்கிறார்.

இந்த வார்த்தைகள் எல்லாம் கிருஷ்ண பகவான் கூறியதில்லை. அர்ஜுனன் அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்துகிறார். அர்ஜுனர் போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கிறார். அவருடைய கண் முன் போரின் சூழல் தெரிகிறது.

ஒரு புறம் அவருடைய கடமை. மறுபுறம் அவருடைய உறவுகள். ஒரு புறம் நமக்காக போராட வேண்டும் என்கின்ற அந்த தர்மம். மறுபுறம் மன குழப்பம். இந்த நிலையில் அவருடைய மனதை ஒருநிலைப்படுத்தி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பதை அர்ஜுனர் உணர்கிறார்.

மகாபாரதம்: மனதை அடக்குவது என்பது காற்றை அடக்குவதைப் போல கடினமானது.. | How To Controlling Mind Is Like Controlling Wind

அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் ஒரே கிருஷ்ணர்… ஏன் முடிவு மட்டும் வேறானது?

அர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் ஒரே கிருஷ்ணர்… ஏன் முடிவு மட்டும் வேறானது?

அதன் நேரத்தில் மணமானது ஒரு கணத்தில் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கிறது. அதே கணத்தில் கடந்த காலத்திற்கும் செல்கிறது. என்றோ நடந்த ஒரு விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நேரங்களில் நடக்காத விஷயங்களை கூட மனம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு நிமிடம் சோகம், மறு நிமிடம் புன்னகை போன்ற கலவைகள் நம்முடைய மனம் ஒரே நேரத்தில் பல திசையை நோக்கி செல்கிறது. அதனால் தான் நம்முடைய மனதை அர்ஜுனர் காற்றுடன் அந்த இடத்தில் ஒப்பிடுகிறார்.

காற்றை நம் கைகளில் பிடித்து நிறுத்த முடியாதது போல் அலைபாயக்கூடிய மனதையும் ஒரே முயற்சியில் நாம் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமானது.

ஆனால், இங்கு சொல்ல கூடிய கிருஷ்ண பகவான் உபதேசம் தான் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அர்ஜுனன் சொல்லக்கூடிய கருத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய கிருஷ்ண பகவான் மனதை அடக்குவது கடினம் என்றாலும் அது சாத்தியமற்றது அல்ல என்று எடுத்துச் சொல்கிறார். அதற்கு இரண்டு வழிகள் இருக்கிறது அதுதான் பயிற்சி மற்றும் பற்றின்மை.

மனம் மீண்டும் மீண்டும் நம்மை விட்டு விலகிச் செல்லும் பொழுது அதை மீண்டும் சரியான இடத்திற்கு கொண்டு வருவதற்கு நமக்கு பயிற்சி தேவை. மனம் ஏதாவது பற்றி கொண்டு அலைபாயுகின்ற பொழுது அதை அதன் பற்றை மெதுவாக குறைத்துக் கொள்வது தான் பற்றின்மை. இது ஒரே நாளில் நடக்கக்கூடிய மாற்றம் இல்லை.

மகாபாரதம்: மனதை அடக்குவது என்பது காற்றை அடக்குவதைப் போல கடினமானது.. | How To Controlling Mind Is Like Controlling Wind

கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன?

கிருஷ்ண பகவானையே கட்டிப்போட்ட ருக்மணியின் அந்த கேள்வி என்ன?

இதை தினம் தினம் அமைதியாக பின்பற்றுவதின் வழியாக நாம் நடைமுறைக்கு கொண்டு வரலாம். பல எண்ணங்கள் தோன்றினாலும் அந்த எண்ணங்களால் நாம் இழுத்து செல்லாமல் இருப்பது தான் முக்கியம்.

கோபம் வந்தாலும் அதை உடனடியாக வெளிக்காட்டாமல் இருப்பது தான் அவசியம். கவலை வந்தாலும் அதற்குள் மூழ்காமல் இருப்பது தான் அவசியம். மேலும், நம்முடைய மனம் அடிக்கடி எதை நினைக்கத் தொடங்குகிறதோ அதுவே நம்முடைய வாழ்க்கை வடிவமாகவும் மாறுகிறது.

அதனால் தான் இறை நினைவு, நல்ல சிந்தனை, தியானம், ஒழுக்கம், கருணை, பொறுமை போன்ற விஷயங்களை மனதில் வளர்த்துக் கொண்டு ஆன்மீக பயணத்தில் ஈடுபடுத்திக் கொள்வது வேண்டும். இந்த உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் மாறிவிட்டது.

கைகளுக்குள் உலகமே அடங்கிவிடலாம் என்றாலும் நம் மனதை அடக்கி அமைதியாக வைத்திருப்பது இன்று வரையிலும் சவாலாகவே இருக்கிறது. நம் மனதை எப்பொழுதும் வலு கட்டாயமாக அடக்கி வைக்க வேண்டும் என்பதை காட்டிலும் நம்மை நாம் புரிந்து கொண்டு செயல்பட தொடங்கினாலே வாழ்க்கை அழகாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US