வாழ்க்கையை மாற்றும் அமாவாசை வழிபாடு... எப்படி செய்வது?

By Sakthi Raj Oct 01, 2026 07:32 AM GMT
Report

நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் அமாவாசை வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், அமாவாசை தினத்தன்று நாம் வழிபாடு செய்கின்ற பொழுது என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்று ஸ்ரீ ஸ்ரீ ரங்கராஜன் சுவாமிகள் அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதைப் பற்றி பார்ப்போம்.

அமாவாசை திதியில் முன்னோர்களுக்கு நாம் சைவ உணவுகளை படைத்து வழிபாடு செய்வது என்பது நமக்கு முன்னோர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும். அது மட்டுமல்லாமல் நமக்கு பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரக்கூடிய கர்ம பலன்களும் நமக்கு குறைகிறது.

மேலும், ஜோதிடம் என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது நாடி ஜோதிடம் சாதாரண கணிப்புகளை விட மிகவும் சிறந்ததாக இருக்கிறது. அதிலும், ருத்ர நாடி ஒரு நபருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய நுணுக்கமான குறைகளையும் அதற்கான நிரந்தர தீர்வுகளையும் கண்டறிவதற்கு உதவியாக இருக்கிறது.

தினமும் விளக்கேற்றும் பொழுது செய்யக்கூடாத 6 தவறுகள் என்ன தெரியுமா ?

தினமும் விளக்கேற்றும் பொழுது செய்யக்கூடாத 6 தவறுகள் என்ன தெரியுமா ?

அது மட்டுமில்லாமல் ஜோதிட ரீதியாக ஒருவர் ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும் வழிபாடு செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு அந்த ஜாதகத்தில் அதற்குரிய பிரார்த்தம் இருக்க வேண்டும். அதில் தடைகள் ஏற்படும் பொழுது அதற்குரிய பலன்களை நாம் நாடி சுவடிகள் வழியாக தெரிந்து கொள்ள முடியும்.

மேலும், ஒரு சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதில்லை, கடன் சுமை ஏறிக்கொண்டே போகும் இதற்கு ஆன்மிக காரணங்களை நம் நாடி ஜோதிடம் வழியாக கண்டறிந்து பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளுவதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.

அப்படியாக, அமாவாசை வழிபாடுகளை பற்றியும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விலக செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US