தியானம் செய்யும் போது தடங்கல் வருகிறதா?
ஆன்மிகத்தில் இருப்பவர்களுக்கு நிறைய இடையூறுகள் வருகிறேதே ஏன் உலகியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் எல்லாம் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்க இறைவனை அடையும் பயணத்தில் இன்னல்கள் வரலாமா, இதற்க்கு என்ன தான் தீர்வு.
தவம் செய்ய செய்ய வினை பதிவுகள் அதாவது கர்மா கழியும் என பார்த்தோம் பெரும்பாலான மக்களுக்கு பொதுவான சில கருத்துக்கள் உள்ளன என்னால் 5 நிமிடம் கூட கண்ணை மூடி அமர முடியவில்லை, என்னென்னவோ எண்ணங்கள் வருகின்றன, கை கால் வலிக்கிறது, நேரம் இல்லை, இன்னும் எத்தனையோ காரணங்களை அட்டுக்கிக் கொண்டே செல்வர், ஒன்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வது இல்ல உங்களுக்கு தோன்றுவது போல தான் அழுகணி சித்தருக்கும் தோன்றியதாம் அதை ஒரு பாடலில் கூறியுள்ளார்.
காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ
-அழுகணி சித்தர் பாடல்.
இந்த பாடலின் உண்மையான அர்த்தம் புரிந்தால் உங்கள் சந்தேகம் தெளியும் காட்டான் என்றால் - தன்னை யார் என காட்டாதவன் என்று பொருள், மறைந்து சுக்குமாமாய் இருப்பவன், அப்படி யார் இருக்கிறார் கடவுளை தவிற, ஆக காட்டான் என்றால் கடவுள் என்பது இங்கு அர்த்தமாகும்.
காட்டான் என்ற சொல் அறிவையும் குறிக்கும். இறைவனையும் குறிக்கும், அறிவே தான் தெய்வம் என்று தாயுமானார் கூறியது போல காட்டானை மேலேறி என்பது காட்டு யானை மேல் ஏறி செல்வது அல்ல காடடான் என்றால் கடவுள் என்று பார்த்தோம் அந்த கடவுள் நம் ஐந்து புலன்கள் மீது ஏறி அமர்ந்து உள்ளாராம்.
அதாவது நாம் உடலுக்குள் ஒளிந்து இருக்கும் இறைவன் நம்மை ஒரு வாகனமாக வைத்து பயணம் செய்ய துவங்குகிறான் என்பது பொருள் நாம் ஒரு பேருந்தில் ஏறி செல்வது போல.
நமக்கு உள்ளே இருக்கும் உயிர் (இறைவன்) உடல் என்ற பேருந்தில் தவம் செய்யும் பயணத்தில் செல்கிறான் இன்னும் தெளிவாக கூறவேண்டுமானால் நாம் அறிவு கொண்டு இந்த மெய், வாய் கண், மூக்கு, செவி, எனும் நாம் புலங்களை வென்று வென்று என்றால் அதனுடன் சண்டையிட்டு வெல்வது என நினைக்க வேண்டாம்.
தவம் அல்லது தியானம் செய்ய அமரும் போது கண்ணை மூடி, வாயை மூடி, செவிக்கு வேலை கொடுக்காமல் கால்களை கைகளை மடக்கி அமர்ந்து மனதை மடை மாற்றி விடுகிறீர்கள் அல்லவா.
இந்த நேரத்தில் ஒரு 10 நிமிடமாவது உங்கள் புலங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன இது நீங்கள் உங்கள் உடலுக்கு இடட கட்டளை அதை தான் வெல்வது என இந்த இடத்தில் பொருள் கொள்ள வேண்டும்.
கடைத்தெரு என்றால் கடைவீதி இல்லை கடைசி வீதி என்று அர்த்தம் கிராமத்தில் திட்டும் போது இப்படி கூறுவர் நீயெல்லாம் எங்க கடத்தேற போற என்று., கடை நிலை பயணம் - இந்த உயிர் தவம் செய்து தான் வந்த இடத்திற்கே செல்லும் பயணம் நாட்டார்
நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ என்றால் அறிவானது இறைவனை உணர்ந்து அவனோடு இணைய முயலும்போது எனது வாழ்க்கையில் நான் பற்று கொண்டு அனுபவித்த வினைப்பதிவுகள் எல்லாம் எண்ணங்களாக அடுத்தடுத்து தோன்றுகின்றன.
நாங்கலாம் இருக்கும் போது நீ எங்கள தாண்டி போயிட முடியுமா இல்ல அவ்ளோ லேசுலதான் உன்ன விட்ருவோமா என்று நம்மை பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போல் தவம் செய்யலாம் தியானம் செய்யலாம் என்று அமர்ந்ததும் ஏகப்பட்ட எண்ணங்கள் எழும் என்று பொருள்.
இந்த நிகழ்ச்சி எப்படியிருக்கின்றதென்றால் எனது வினைப் பதிவுகளிலிருந்து எழும் எண்ணங்கள் என்னை நோக்கி நீ எங்களையெல்லாம் தாண்டிப் போய் கடை நிலையாகவுள்ள பரம்பொருளை உணர்ந்து கொள்ள முடியுமா என்று தடுத்து நிறுத்தி என்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போல் உள்ளது.
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும் காட்டானை மேலேறி என் கண்ணம்மா! கண்குளிரக் காண்பேனோ - என்று என்னதான் என்னை என் எண்ணங்கள் தொந்தரவு செய்தாலும் எப்படியாவது அவர்களையெல்லாம் தாண்டி நான் என் மூலத்தை சென்றாடைவேன் என்பத்தை ஏக்கத்துடன் கண்குளிரக் காண்பேனோ என கூறுகிறார் அழுகணி சித்தர்.
ஆக அழுகணி சித்தரும் கடந்து வந்த நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |