போலி ருத்ராட்சத்தை கண்டுபிடிப்பது எப்படி?
சிவ பத்தர்கள் அனைவரும் கழுத்தில் ருத்ராட்சம் அணிவது உண்டு.அதிலும் சமீபகாலமாக ருத்ராட்சம் அணிவோரின் எண்ணிக்கை அதிகம் ஆகியுள்ளது.அப்படியாக ஒரு விஷயம் அதிக அளவில் மக்களால் ஈர்க்கப்படுகிறது என்றால் வியாபாரம் பெருகி போட்டிகள் காரணமாக மார்க்கெட்டில் போலி பொருட்கள் வந்து விடும்.
அந்த வகையில் ருத்ராட்சமும் இப்பொழுது அதிக இடத்தில் போலி ஆக விற்க தொடங்கிவிட்டனர்.பொதுவாக உண்மையான ருத்ராட்சம் அணிவதால் மட்டுமே நாம் அதை அணிந்ததற்கான முழு பலனை பெற முடியும்.அந்த வகையில் நாம் வாங்கி அணிந்து இருக்கும் ருத்ராட்சம் உண்மையானதா இல்லை போலி ருத்ராட்சமா என்று அறிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
ருத்ராட்சம் பல வகையில் உள்ளது.கமுகி ருத்ராட்சத்தில் தொடங்கி 21 வகைகள் உள்ளன.அதாவது ருத்ராட்சங்களின் முகங்கள் அவற்றில் உள்ள துளைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.அதே போல் நாம் எந்த முக ருத்ராட்சம் அணிகின்றமோ அதற்கான பலனை தான் நாம் பெற முடியும்.
மேலும்,உண்மையான ருத்ராட்சம் மரங்களில் வளரக்கூடியது.அந்த மரம் நீல நிற பழங்களைத் தரும். காய்கள் காய்ந்ததும் கருப்பாக மாறும்.பிறகு இரண்டு நாட்கள் தண்ணீரில் ஊறவைத்த பிறகு, ருத்ராட்சங்கள் ஓட்டில் இருந்து அகற்றப்படுகின்றன.
இந்தியாவில் ருத்ராட்சம் எல்லா இடங்ளிலும் கிடைத்தாலும் அனைத்து முக ருத்ராட்சம் நேபாளில் தான் கிடைக்கிறது.எப்பொழுதுமே நாம் போலி ருத்ராட்சதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.அதற்கு ரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ருத்ராட்சத்தை வைக்கவும்.
தண்ணீரில் மூழ்கினால் அது உண்மையான ருத்ராட்சம். தண்ணீரில் மிதந்தால் அது போலி ருத்ராட்சம்.மேலும் உண்மையான ருத்ராட்சம் அதன் நிறத்தை எப்பொழுதுமே இழக்காது.அதே நேரத்தில், போலி ருத்ராட்சத்தை சிறிது நேரம் கடுகு எண்ணெயில் போட்டு வைத்திருந்தால் அதன் நிறம் மறைந்துவிடும்.
ஆக இவ்வாறு செய்யும் பொழுது நாம் உண்மை எது போலி எது என்று சுலபமாக கண்டுபிடித்து அணிந்து கொள்ளலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |