வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலக செய்யவேண்டிய வெள்ளிக்கிழமை பரிகாரம்
கண் திருஷ்டி ஆனது ஒரு மனிதனை எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி விடும்.அதற்கு அவ்வளவு ஆற்றல் உண்டு.ஒரு மனிதனின் தீய எண்ணங்கள் ஒருவரை சூழும் பொழுது அவர்கள் குழப்பத்திற்கும் உடல்நிலை பாதிப்புகளுக்கும் ஆளாகிவிடுவார்கள்.
இதனால் தான் பெரியவர்கள் வாரம் வாரம் வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுத்தி போடவேண்டும் என்று சொல்லுவார்கள்.இவ்வாறு செய்யும் பொழுது நம் மீது பிறர் கொண்டுள்ள எதிர்மறை பார்வை விலகும் என்பது நம்பிக்கை.
பெரும்பாலான மக்கள் இந்த கண் திருஷ்டியை ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை தினங்களில் தான் பரிகாரம் செய்வார்கள்.ஆனால் இதை வெள்ளிக்கிழமையில் செய்தாலும் நமக்கு சிறந்த பலன் கிடைக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
இந்த கண் திருஷ்டி ஒரு மனிதனின் கிரக நிலை சற்று கீழ் இறங்கும் பொழுதும்,அவன் மனதார உடலால் சோர்வு அடையும் பொழுதும் எளிதாக தாக்கி விடுகிறது.ஒருவர் கிரக நிலை உச்சத்தில் இருக்கும் பொழுது அவர்களை திருஷ்டி தாக்குவதில்லை.
அப்படியே திருஷ்டி இருந்தாலும் அது அவர்களை பெரிதளவில் பாதிக்க போவதில்லை. வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அல்லது வீட்டில் உள்ள நபர்களுக்கு ஏதேனும் சொந்தக்காரர்கள் ஊருக்கு சென்று வந்தாலோ,இல்லை ஏதேனும் நிகழ்ச்சிக்கு சென்று வந்தாலோ உடல் உபாதைகள் ஏற்படுவதை பார்க்க முடியும்.
இதற்கெல்லாம் காரணம் கண் திருஷ்டி தான். அப்படியானவர்கள் நீங்கள் எப்போதுமே பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், மாதம் தோறும் ஒரு முறை வெள்ளிக் கிழமையில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு.நம்முடைய வீட்டில் கட்டாயம் வெள்ளிக்கிழமை அன்று விளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்வது உண்டு.
இந்த திருஷ்டி பரிகாரம் செய்ய அன்றைய தினத்தில் மாலை வேளையில் விளக்கு ஏற்றும் பொழுது ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து,மனம் உருகி பிராத்தனை செய்து கொள்ள வேண்டும்.பிறகு பிரார்த்தனை செய்து அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக அறுத்து குங்குமம் தடவி நிலை வாசலில் இரண்டு பக்கமும் வைத்து விட வேண்டும்.
இது முதல் பரிகாரம்.அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேலாக ஒரு முழு பூசணிக்காயை எடுத்து அதன் மேலே கற்பூரம் வைத்து, உங்கள் வீட்டையும், உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களையும் சுற்றி பூசணிக்காய் உடைக்கலாம்.
இவ்வாறு செய்யும் பொழுதும் கண் திருஷ்டி விலகும். இது பெரும்பாலான மக்கள் தெரிந்த பரிகாரம் என்றாலும் வெள்ளிக்கிழமை செய்வதின் மூலம் வீட்டில் உள்ள திருஷ்டி கழியும் என்பது நம்பிக்கை.நம்மை நம் குடும்பத்தை எதிர்மறை கண்கள்,எண்ணங்களில் இருந்து பாதுகாப்பது அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |