தீபாவளியன்று இந்த ஒரு விஷயம் செய்தால் அதிர்ஷ்டத்தில் பணமழை கொட்டுமாம்
இந்து மதத்தில் தீபாவளி பண்டிகை என்பது மிக முக்கியமாக கொண்டாட கூடிய அற்புதமான பண்டிகையாகும். பலரும் இந்த தீபாவளி பண்டிகை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். காரணம் தீபாவளி பண்டிகை வேளையில் குடும்பமாக ஒன்று சேர்ந்து அதிகாலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடைகள் அணிந்து உணவுகள் உண்டு இனிப்புகள் பரிமாறி கொண்டாடுவார்கள்.
மேலும் தீபாவளி திருநாள் அன்று வீடு முழுவதும் ஒளி நிறைந்த காணப்படும். காரணம் வீடுகளில் விளக்கு ஏற்றுவது தொடங்கி வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடுவோம். அந்த வகையில் தீபாவளி பண்டிகைகளில் நம்முடைய வீடுகளில் லட்சுமி தேவி வருகை தந்து அருள் புரிவதற்கு ஒரு சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
தீபாவளி பண்டிகையின் பொழுது லட்சுமி தேவியை மகிழ்விக்க நாம் வீடுகளில் பல்வேறு பூஜைகளும் வழிபாடு செய்வோம். மேலும், தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 2025 அக்டோபர் 20ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை உலகம் எங்கிலும் கொண்டாட உள்ளது. இந்த நாளில் மகாலட்சுமி தேவியை தரிசனம் செய்ய மாலை 7 மணிக்கு நீராடி விட்டு வெள்ளை ஆடைகளை அணிந்து தாமரை விதை மாலையை அணிந்து உங்கள் முன் ஒரு விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு லட்சுமி தேவிக்கு மலர்கள் சமர்ப்பித்து லக்ஷ்மி தேவி உரிய 'ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே பிரசித்த ப்ரஸித்த ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்மி நமஹ' என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யும் பொழுது எந்த ஒரு கவன சிதறல் இல்லாமல் மனம் லட்சுமி தேவியை மட்டுமே நினைத்து பாராயணம் செய்வது அவசியம் ஆகும்.
இவ்வாறு செய்வதனால் நம் மனதில் நேர்மறை சக்திகள் நிறைந்து லட்சுமி தேவியின் அருளை பெற வழியாக இருக்கும். மேலும் எந்த ஒரு மனிதனும் வாழ்க்கையில் சிறப்பாக வாழவும் லட்சுமி கடாட்சம் பெறவும் கட்டாயமாக அவன் லட்சுமி தேவியின் அருளை பெற்ற வேண்டும்.
ஆக, இந்த அற்புதமான தீபாவளி பண்டிகை நாளில் லட்சுமி தேவியை மனதார வழிபட்டு அவளின் அருள் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







