இவர் நினைத்தால் மட்டுமே நமக்கு வெற்றியை தர முடியுமாம்- அவர் யார் தெரியுமா?
நம்முடைய வாழ்க்கை என்பது இன்னல்களும் சுவாரசியங்களும் நிறைந்தது. அந்த வகையில் மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில் அவமானங்களும் மீள முடியாத துன்ப நிலையிலும் ஒரு முறையாவது காலம் அவர்களை நிறுத்தி இருக்கும். அந்த வேளையில் அவர்கள் செய்வதறியாது போராடி ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு மன உறுதியோடு இருப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கு ஒருவர் துணையும் வழிகாட்டுதலும் இறைவனின் ஆசீர்வாதமும் தேவை. அந்த வகையில் வாழ்க்கையில் ஒருவர் உயர்நிலையை அடைய வேண்டும், நினைத்ததை சாதிக்க வேண்டும், தர்மம் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் கட்டாயம் சரணடைய கூடிய ஒரே தெய்வம் சூரிய பகவான் தான்.
நவக்கிரகங்களுடைய அதிபதியாக இருக்கக்கூடிய சூரிய பகவானுடைய அருள் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் இந்த உலகத்தில் பெயர் புகழோடு வளம் வர முடியும்.
அப்படியாக சூரிய பகவானின் அருள் கிடைக்க எவ்வாறு வழிபாடு செய்வது என்று பார்ப்போம். தினமும் காலை உதிக்கும் சூரியனால் தான் இந்த உலகம் இன்னும் இயங்கி கொண்டு இருக்கிறது என்று உறுதி செய்ய முடிகிறது.
அதனால் தினமும் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து முடிந்தவர்கள் குளிக்கலாம், முடியாதவர்கள் முகம், கை, கால்கள் கழுவி சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி சூரிய பகவானை மனதார வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தவர்கள் சூரிய பகவானுக்குரிய 'ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்ய: ப்ரசோதயாத்' இந்த மந்திரங்கள் பாராயணம் செய்யலாம்.
அல்லது இப்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியால் நிறைய தெய்வீக பாடல்கள் நாம் கேட்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதை ஒலிக்க செய்து நாம் காலையில் கேட்கலாம். இவ்வாறு தொடர்ந்து நாம் சூரிய பகவானை தினமும் காலையில் வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கை ஒரு அழகான நடைமுறைக்கு வருவதையும் சந்திக்கும் இன்னல்கள் படிப்படியாக விலகுவதை காணலாம்.
அதோடு சூரிய பகவானை வழிபாடு செய்த கையோடு நாம் துளசி தேவியை வழிபாடு செய்ய வேண்டும். துளசி தேவி மகாலட்சுமி அம்சமாக போற்றப்படுகிறது. இவர்கள் இருவரின் அருளும் நமக்கு தினமும் காலை வேளையில் கிடைத்துவிட்டால் அந்த நாள் முழுவதும் நம்முடைய வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
அதே சமயம் எவ்வளவு பெரிய அவமானங்கள் எவ்வளவு பெரிய துயரங்கள் வந்தாலும் சூரிய பகவான் நமக்கு ஒளியை கொடுத்து நம்முடைய இருளில் இருந்து காப்பாற்றுவார். அதோடு குழந்தைகளும், மாணவர்களும் படிப்பில் சிறந்து விளங்கவும், போட்டித் தேர்வில் வெற்றி பெறவும், வேலையில் உயர் பதவி அடைய வேண்டும் சம்பள உயர்வு பெற வேண்டும் என்று விரும்புபவர்களும் கட்டாயம் சூரிய பகவானை சரணடைந்து விட்டால் பிறகு அவர்கள் வாழ்கையில் வெற்றியை மட்டும் தான் பெறுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







