சித்தர்கள் அருள் நமக்கு இருப்பதின் அறிகுறிகள் என்ன?
சித்தர்கள் என்பவர்கள் ஆச்சிரியங்களில் உச்சமாக இருக்கக்கூடியவர்கள். அவர்கள் அறியாத விஷயம் என்ற ஒன்று இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மனிதர்கள் முதல் விலங்குகள் வரை அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சித்தர்கள் அறிந்து, அதற்கு மருத்துவமும் தெரிந்து வைத்திருந்தவர்கள்.
மேலும், சித்தர்கள் நம்முடைய வழிகாட்டிகள் என்று தான் சொல்ல வேண்டும். மனிதர்கள் வாழும் இந்த வாழ்க்கையை சரியான முறையில் வாழ அவர்கள் நமக்காக நிறைய விட்டு சென்று இருக்கிறார்கள். மேலும், சித்தர்கள் என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது நாம் கேட்டதை கொடுக்கக்கூடியவர்கள் என்று தான்.
ஆம், சித்தர்கள் என்பவர்கள் நாம் கேட்ட வரத்தை கொடுக்கக்கூடியவர்கள் தான் இருந்தாலும், நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப அவை நடத்திக்காட்டுவார்கள். ஒரு மனிதன் விடாப்பிடியாக ஒரு விஷயத்தை அடையவேண்டும் என்று இறைவனை நோக்கி தவம் இருந்தால், அந்த மனிதனை தேடி கட்டாயம் சித்தர்கள் வருவார்கள்.
அவனின் தவத்திற்கு ஏற்ப அவனுக்கு அருள் வழங்கி செல்வார்கள் என்பது நம்பிக்கை. அதே போல் சித்தர்களின் அருள் நமக்கு இருக்கிறது என்பதற்கு சில அறிகுறிகள் இருக்கிறது. அதை வைத்து சித்தர்களின் அருள் நமக்கு கிடைக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
அதோடு நாம் கருட சஞ்சீவினி பற்றி கேள்வி பட்டு இருப்போம். அப்படியாக கருட சஞ்சீவினி என்றால் என்ன? அதில் ஒளிந்து இருக்கும் ரகசியங்கள் என்ன என்பதை பற்றியும், சித்தர்கள் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் வித்யா கார்த்திக் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |