பல துயரங்களால் வாழ்க்கையை வெறுத்து விட்டீர்களா? இதை படித்து பாருங்கள்..

By Sakthi Raj Nov 01, 2026 09:19 AM GMT
Report

பலருக்கும் ஒரு சிறிய கஷ்டங்கம் வந்தாலே வாழ்க்கையில் வெறுத்து விடுகிறார்கள். ஒரு சிறிய தோல்வியினால் என்னால் எதுவும் சாதிக்க முடியாது என்று முடிவெடுத்து விடுகிறார்கள். சின்ன கால தாமதத்தினால் என் வாழ்க்கையே மாறாது என்று எண்ணிவிடுகிறார்கள்.

அந்த வகையில், உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வெறுத்து விட்டீர்கள் என்ற பொழுது இந்த ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதாவது எறும்பு பார்ப்பதற்கு சிறிய உயிர்தான் என்றாலும் அதனுடைய உழைப்பு மிகப்பெரிய பெரியது. தன்னுடைய எடையை விடவும் அதிகமான எடையை அவை சுமந்து செல்கிறது.

பல துயரங்களால் வாழ்க்கையை வெறுத்து விட்டீர்களா? இதை படித்து பாருங்கள்.. | How To Overcome Diificult Times In Life

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருத்தமான திருமண நட்சத்திரங்கள் என்ன?

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருத்தமான திருமண நட்சத்திரங்கள் என்ன?

அதேபோல், சிலந்தியை எடுத்துக் கொண்டால் அதனுடைய வலை அறுந்து கலைந்தாலும் மீண்டும் மீண்டும் கட்ட துவங்குகிறது. புறா அதனுடைய கூடு சிறியதாக இருந்தாலும் தன் சந்ததியை அவை வளர்க்கிறது.

ஆமையை எடுத்துக் கொள்கின்ற பொழுது அவை மெதுவாக சென்றாலும் இலக்கை அடைவதில் தடுமாறுவதில்லை. யானை எவ்வளவு வலிமையாக இருந்தாலும் தலைகனம் இல்லாமல் பொறுமையாகவே செல்கிறது.

ஒட்டகம் எடுத்துக் கொள்கின்ற பொழுது அதற்கு தண்ணீர் இல்லை என்றாலும் தொண்டை வறண்டாலும் தான் அடைய வேண்டிய தூரத்தை அவை அடைகிறது.

மான் அதற்கு எவ்வளவு ஆபத்து வந்தாலும், சிக்கினாலும் அதனுடைய முயற்சியை அவை கைவிடுவதே இல்லை. இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளது.

பல துயரங்களால் வாழ்க்கையை வெறுத்து விட்டீர்களா? இதை படித்து பாருங்கள்.. | How To Overcome Diificult Times In Life

தீபாவளியன்று மகாலட்சுமியின் அருளைப் பெற செய்ய வேண்டிய 6 விஷயங்கள் என்ன?

தீபாவளியன்று மகாலட்சுமியின் அருளைப் பெற செய்ய வேண்டிய 6 விஷயங்கள் என்ன?

அதில் நாம் பார்த்த அந்த ஐந்தறிவு ஜீவனங்ள் வாழ்க்கையில் எந்த நிலையிலும் அவர்களுடைய கடமையை செய்வதை தவறுவதில்லை. அவர்கள் அந்த கடமையை செய்வதாலேயே அவர்களுடைய அந்த நிலையானது மாறுகிறது.

ஆனால், மனிதர்கள் தான் துன்பம் என்று வருகின்ற பொழுது நம்முடைய நிலையை மறந்து நம்முடைய கடமையை மறந்து வாழ்க்கையில் வெறுத்து விடுகின்றோம்.

அந்த ஐந்தறிவு ஜீவன்களைப் போல் எந்த துயரம் வந்தாலும் தன்னம்பிக்கையோடு செயல்படுகின்ற பொழுது நிச்சயமாக நமக்கான நாள்வரும் அதில் நாமும் வெற்றி கொள்வோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US