மீள முடியாத துரோகத்தில் இருந்து மீண்டு வர செய்ய வேண்டிய வழிபாடு
உலகத்தில் மனிதனாக பிறந்தால் இன்ப துன்பத்தை மாறி மாறி சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும்.அதிலும் ஒரு மனிதன் சந்திக்கவே கூடாத விஷயங்களில் ஒன்று நம்பியவர்கள் அவர்களுக்கு செய்த துரோகம்.அந்த வலி மரணத்தை விட மோசமானது.எத்தனை பெரிய பலம் பொருந்திய மனிதனாக இருந்தாலும் அவர்களால் துரோகம் செய்த வலியில் இருந்து மீளவே முடியாது.
ஒரு நல்ல மனிதன் ஒரு பொழுதும் பிறருக்கு மனதார தீங்கு செய்ய நினைக்கமாட்டான்.ஆனால்,அறியாமை என்னும் இருட்டில் வாழ்ந்து தான் என்ற அகங்காரம் கொண்டவன் தான் பிறருக்கு துரோகம் செய்ய தயங்க மாட்டான். அப்படியாக ஏதோ கால சூழ்நிலையால் துரோகத்தின் பிடியில் சிக்கி கொண்டு தவிக்கும் உயிருக்கு தான் தெரியும் அதனின் வலியும் வேதனையும்.
பொதுவாக துரோகம் என்பது பணம் சொத்து என்று தொடங்கி நாம் நம்பி நம்மை பற்றி பகிர்ந்த விஷயத்தை நமக்கு எதிராக செயல்படுத்தும் பொழுது நம் மனம் மிகுந்த வேதனை அடையும்.சிலரால் அதில் இருந்து மீண்டு வரமுடியாத சிக்கலில் தவித்து கொண்டு இருப்பார்கள்.
அந்த வேதனையில் அவர்கள் மனதிற்கு தைரியம் கொடுக்க செய்ய வேண்டிய ஒரே விஷயம் இறை வழிபாடு தான்.மேலும் நாம் துரோகத்தின் பிடியில் சிக்கி கொண்டு இருக்கும் பொழுது மறந்தும் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்ய கூடாது.உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்தால் நம் மனம் வலியில் இருந்து வெளியில் வருவதை காட்டிலும் கோபத்தின் பிடியில் மாட்டிக்கொள்ளும்.
அப்படியாக அந்த வலிமிகுந்த வேதனையில் நாம் அம்பாள் வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.அதிலும் கன்னியாகுமரியில் அருள் பாலிக்கும் பகவதி அம்மனை வழிபாடு செய்தால் மனம் சாந்தம் அடையும்.நமக்கு துரோகம் செய்தவர்கள் வீழ்ந்து போகவேண்டும் என்று எண்ணம் கொள்வது தவிர்த்து,நாம் அதில் இருந்து முதலில் மீண்டு வரவேண்டும் என்ற பிராத்தனை செய்யவேண்டும்.
காரணம்,காலம் எல்லாம் கவனித்து கொண்டு இருக்கிறது.ஒரு மனிதனின் உயிர் பிரியும் முன் அவன் செய்த பாவ செயலுக்கான கூலியை அவன் கட்டாயம் அனுபவித்தே தீர வேண்டும்.இல்லை என்றாலும் மீண்டும் ஒரு பிறவி எடுத்து அதற்கான தக்க பலனை அவன் நிச்சயம் அனுபவிப்பான்.
ஆக வலியின் வேதனையில் இருக்கும் காலகட்டத்தில் கடல் அலைகளுடன் வீற்றியிருக்கும் அன்னையை சென்று தரிசனம் செய்து வாருங்கள்.இல்லை என்றால் வீட்டில் இருந்த படியே அன்னையை மனதில் நினைத்து கொண்டு வழிபாடு செய்துவாருங்கள்.உங்கள் மனதின் வலிக்கு அன்னையின் அருள் மருந்தாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |